Asianet News TamilAsianet News Tamil

விதியை மீறிய திமுக...! நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த பாஜக... குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்

கோவையில் மேம்பால தூண்களில் திமுகவினர் போஸ்டர் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Police arrested those who participated in the BJP protest in Coimbatore against the posting of posters in violation of the rules
Author
Kovai, First Published Aug 12, 2022, 9:12 AM IST

கோவையில் போஸ்டர் யுத்தம்

கோவை -அவிநாசி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பால தூண்களில்  தமிழக அரசின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் படம் பொறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த தூண்களில் எந்தவிதமான விளம்பரங்களோ அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளோ ஒட்டக்கூடாது என மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் விதியை மீறி திமுகவினர் சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ்  வரை கட்டப்பட்டுள்ள தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து கடந்த வாரம் அந்த சுவரொட்டிகளை அப்புறப்படுத்துமாறு கோவை மாவட்ட  பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இருந்தாலும்  போஸ்டரை அப்புறப்படுத்தப்படாத  நிலையில் நேற்று முன் தினம் இரவு பாஜகவினர் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை படம் பொறித்த சுதந்திர தின வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்ட துவங்கினர். இதைத் தொடர்ந்து திமுகவினரும் அங்கு திரண்டு எதிர் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி  கூட்டத்தை கலைத்தினர். 

நடத்துவது டாஸ்மாக்கு.. போதை இல்லா தமிழகம் உருவாக்க போறாராம்.. திமுக அரசை டாரா கிழிக்கும் அண்ணாமலை.

Police arrested those who participated in the BJP protest in Coimbatore against the posting of posters in violation of the rules

திமுக- பாஜக மோதல்

இந்த சூழலில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் பாஜகவினர் 500க்கும் மேற்பட்டோர் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் விதி மீறி ஒட்டப்பட்டுள்ள திமுகவினரின் சுவரொட்டிகளை அப்புறப்படுத்துமாறு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத காவல்துறையினர், தூண்களில் ஒட்டப்பட்டிருந்த திமுகவினரின் போஸ்டர்களுக்கு பாதுகாப்பு அளித்ததால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் நள்ளிரவு சுமார் 11:30 மணி அளவில் அப்பகுதியில் உள்ள சுமார் 7 தூண்களில் ஒட்டப்பட்டிருந்த திமுகவின் சுவரொட்டிகளை பாஜகவினர் கிழித்தனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுப்புகளை கொண்டு தடுக்கவே இரு தரப்பினரிடையே கைகலப்பு உருவானது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை தரதரவென இழுத்தும் குண்டுகட்டாக தூக்கியும் கைது செய்தனர். இதனிடையே போராட்டம் நடந்து கொண்டிருந்த கொடிசியா சந்திப்பிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் கொடிசியா மைதானத்திற்குள் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Police arrested those who participated in the BJP protest in Coimbatore against the posting of posters in violation of the rules

பாஜகவிரனை கைது செய்த போலீஸ்

அதே வேளையில் பாஜக வை சேர்ந்த நான்கு பேர் ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஒரு தூணில் ஒட்டப்பட்டிருந்த திமுக வினரின் சுவரொட்டியை மீண்டும் கிழித்ததையடுத்து தகவலறிந்த திமுக வினர் அங்கு திரண்டு சுவரொட்டியை கிழித்த பாஜக தொண்டர் ஒருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துடன் சில நிமிடங்களிலேயே  அதே இடத்தில் வேறொரு சுவரொட்டியை ஒட்டினர். மேலும் அங்கு திமுகவினர் திரண்டதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆனால் கொடிசியா சந்திப்பு பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் 200 பேர் விதி மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தும் வரை கலைய மாட்டோம் என்று கூறி தொடர்ந்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த மூன்று தினங்களுக்குள் போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்படும் எனவும் கைது செய்யப்பட்ட பாஜகவினர் விடுவிக்கப்படுவார்கள் எனவும் உறுதியளித்ததன் பேரில் நள்ளிரவு 1.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்த பாஜகவினர், மூன்று தினங்களுக்குள் விதிமீறி ஒட்டப்பட்ட திமுக  போஸ்டர்கள் அப்புறப்படுத்தப்படாத பட்சத்தில் வருகிற 16-ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்து சென்றனர். இதனையடுத்த கோவை -அவிநாசி சாலையில்  உள்ள முக்கிய சந்திப்புகளில்  காவல்துறையினர் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதையும் படியுங்கள்

அதிமுகவின் அலட்சிய போக்கை திமுகவும் தொடர்வது வெட்கக்கேடு... இதுதான் விடியல் ஆட்சியா..? சீமான் ஆவேசம்
 

Follow Us:
Download App:
  • android
  • ios