நடத்துவது டாஸ்மாக்கு.. போதை இல்லா தமிழகம் உருவாக்க போறாராம்.. திமுக அரசை டாரா கிழிக்கும் அண்ணாமலை.

போதையின் பாதையிலிருந்து தமிழகத்தை முற்றிலுமாக மீட்க வேண்டும், போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க சர்வாதிகார மாறுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 

Tasmac is running.. He is going to create a drug-free Tamil Nadu.. Annamalai criticized dmk government.

போதையின் பாதையிலிருந்து தமிழகத்தை முற்றிலுமாக மீட்க வேண்டும், போதைப்பொருள் நடமாட்டத்திற்கு துணை செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க சர்வாதிகார மாறுவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பயன்பாடு கொண்டிருக்கிறது போதைக்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதை நினைக்கும் போது கவலையும் வருத்தமும் கூடவே செய்கிறது. போதைப் பொருட்கள் என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு மிக முக்கிய காரணம் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களையும் தடுக்க வேண்டும் என்பதுதான் ஒருவர் போதையை பயன்படுத்தி தெருவில் விழுந்து கிடப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கக்கூடாது போதைப்பொருளால் தான் கொலை கொள்ளை பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

Tasmac is running.. He is going to create a drug-free Tamil Nadu.. Annamalai criticized dmk government.

என்று தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். இதுபோன்ற ஒரு விழிப்புணர்வுடன் கூடிய ஒரு விளக்கத்தைத் தான் நான் தமிழக முதல்வர் அவர்களிடமிருந்து எதிர்பார்த்தேன். போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் இத்தனை விரிவாக இத்தனை தெளிவாக நம் மாநிலத்தின் முதல்வர் அவர்கள் அறிந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்வது நல்லதல்ல... உடனே இதை செய்யுங்கள்... துரைமுருகன் அறிவுறுத்தல்!!

ஆனால் போதைப் பழக்கத்தின் தீமைகளை பற்றி தெளிவாக அறிந்த நம் முதல்வருக்கு மதுபானம் தான் அதிக போதை தருகிறது என்பதை பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. தமிழகத்தில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை எடுத்துக்கொண்டால் மதுபானத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை தான் மிக அதிகம்.உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும், தாங்கள் அன்றாடம் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் டாஸ்மாக்கில் கொடுத்துவிட்டு, குடும்பத்தை கவனிக்காமல் தவிக்க விடுகின்றனர். 

Tasmac is running.. He is going to create a drug-free Tamil Nadu.. Annamalai criticized dmk government.

அரசு தானாக முன்வந்து மதுக்கடைகளை மூடினால், தமிழகத்தில் உள்ள பெண்கள் எல்லோரும் நிம்மதி அடைவார்கள். குற்றங்கள் குறையும்.
தமிழகத்திலுள்ள மாணவர்களும் மாணவிகளும் மிக எளிமையாக மதுபானங்களை வாங்கி பயன்படுத்திய காணொளிகள் சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கின்றன. வருங்கால சந்ததியை பாழாக்கி, குடிகெடுக்கும் மதுபானம் ஒரு ”போதைப் பழக்கம்” என்பதை தமிழகத்தின் முதல்வர், ஏன் உணராதது போல நடந்து கொள்கிறார். 

இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு செல்லுமா.? செல்லாதா.? நீதிமன்றத்தில் காரசார விவாதம்..! தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி

குடும்பத் தலைவிகளுக்கான, பெண்களுக்கான, நலத்திட்டங்களைத்தான் நிறைவேற்ற மனமில்லை, குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். குடும்பங்களைப், பெண்களை நிம்மதியாக வாழ வைக்கும் வகையில், தமிழக அரசின் மதுபானக் கடைகளை மூடும் முடிவை எடுக்கும்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கிறேன் என அண்ணாமலையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tasmac is running.. He is going to create a drug-free Tamil Nadu.. Annamalai criticized dmk government.

இதே போல், முதல்வரின் போதை ஓழிப்பு அறிவிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், போதையில்லா தமிழகம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய தமிழக முதல்வர் சர்வாதிகாரி ஸ்டாலின் அவர்கள் முடிவை வரவேற்கிறோம். டாஸ்மார்க் மது அரக்கனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுவிட்டு , போதையில்லா தமிழகம் உருவாக வேண்டும் 
என்பது பகல்கனவு வெற்று வார்த்தை !கசாப்புக்கடைக்காரன்  காருண்யம் பேசுவது போல; ஓட்டை பானையில் தண்ணீர் ஊற்றுவது போல முதல்வர் வார்த்தை அமையும்.

குடிகெடுக்கும் மதுக்கடையை மூடினால் தமிழக மக்கள் நன்றி கடனோடு இருப்பார்கள். இல்லையெனில் முதல்வர் ஸ்டாலின் அவருடைய வார்த்தை தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விடுவது போல, கசாப்பு கடைக்காரன் காருண்யம் பேசுவது போல இருக்கும்.போதையில்லா தமிழகம் உருவாக டாஸ்மாக் மது கடைகளை முதலில்மூட வேண்டும் என்பது மக்களுடைய எண்ணம். தமிழன் தள்ளாடி கொண்டு இருந்தால் தான் தமிழகஅரசாங்கம் நிலையாக இருக்க முடியும் என முதல்வர் நினைக்கிறாரோ என்னவோ தெரியவில்லை இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios