தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செய்வது நல்லதல்ல... உடனே இதை செய்யுங்கள்... துரைமுருகன் அறிவுறுத்தல்!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் உள்ளிட்ட சட்டமசோதாக்களில் கையெழுத்திட வேண்டும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் உள்ளிட்ட சட்டமசோதாக்களில் கையெழுத்திட வேண்டும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டி விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் மீதான வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வருகிறது. அப்போது பார்க்கலாம். ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது. கும்மிடிப்பூண்டி முதல் கிருஷ்ணகிரி வரை ஆந்திரா பகுதி இருப்பதால் எளிதில் கடத்தி வந்து விடுகின்றனர்.
இதையும் படிங்க: ஆளுநர்- ரஜினி அரசியல் பேசியதில் தப்பே இல்ல.. நாடு உருப்பட அரசியல் பேசணும்.. சீமான் அடித்த அந்தர் பல்டி .
ஆளுநர், நடிகர் ரஜினி சந்திப்பு சொல்ல முடியாத அரசியல். தமிழக ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல. அவர் தன்னை உணர்ந்து நீட் உள்ளிட்ட சட்டமசோதாக்களில் கையெழுத்திட வேண்டும். பாலாற்றில் தற்போது தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். மேல்அரசம்பட்டு அணை கட்டிட பணி அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு செல்லுமா.? செல்லாதா.? நீதிமன்றத்தில் காரசார விவாதம்..! தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி
முன்னதாக தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.