கர்நாடக சட்டமன்ற தேர்தலில் கன்னட மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஏசியாநெட் நியூஸ், மக்களிடம் கருத்து கேட்டு கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
08:52 PM (IST) Apr 21
சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் போட்டியை குடும்பத்துடன் கண்டு ரசிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!..
04:19 PM (IST) Apr 21
ரஜோரியில் ராணுவ டிரக் மீது தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.
02:37 PM (IST) Apr 21
முன்னணி மொபைல் நிறுவனமான ஐக்யூ நிறுவனம் அசத்தலான ஆபர்களை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இங்கே காணலாம்.
02:06 PM (IST) Apr 21
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
01:27 PM (IST) Apr 21
தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் ரணதீரன் என்கிற பாண்டிய மன்னனின் வரலாற்றை பேசும் படமாக வெளியாகி இருக்கும் யாத்திசை திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
01:13 PM (IST) Apr 21
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் டிகே சிவகுமாரின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
12:32 PM (IST) Apr 21
கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அமித்ஷா இன்று முதல் முறையாக வருகை தர உள்ளார்.
11:46 AM (IST) Apr 21
ஜெயலலிதா அம்மையாரின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களை அவரின் கட்சியின் முதலமைச்சராக இருந்தவரே மறைக்க முற்படுகிறார். அப்படி நடக்கும் போது திமுக எப்படி சும்மா இருக்க முடியும்?; உறுதியாக சொல்கிறேன் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவரும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
11:42 AM (IST) Apr 21
அட்சய திரிதியை அன்று பொருட்கள் வாங்குவது நல்லது. அதே சமயத்தில் சில பொருட்களை தானமாக கொடுப்பது உங்களது வாழ்க்கையை முன்னேற்றும் என்பது ஐதீகம்.
11:18 AM (IST) Apr 21
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு பிரபல அரசியல் கட்சியில் சேர உள்ளார் என்பது பேசுபொருளாகியுள்ளது.
11:03 AM (IST) Apr 21
டெல்லியில் உள்ள சாகேத் மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
10:58 AM (IST) Apr 21
சென்னையில் தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர்.
10:57 AM (IST) Apr 21
தக்ஷின் மாநாட்டில் நடிகர் தனுஷுக்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. கேப்டன் மில்லர் லுக்கில் வந்து அவர் இவ்விருதை பெற்றுக்கொண்டார். மேலும் படிக்க
10:25 AM (IST) Apr 21
நடிகர் மம்முட்டியின் அம்மாவும், துல்கர் சல்மானின் பாட்டியுமான ஃபாத்திமா இஸ்மாயில் இன்று காலமானார். அவருக்கு வயது 93. வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஃபாத்திமா இஸ்மாயில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படிக்க
09:41 AM (IST) Apr 21
நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்து உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை காணலாம்.
09:35 AM (IST) Apr 21
நடிகர் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த வேண்டாம் என படக்குழுவினரிடம் அறிவுறுத்தி உள்ளாராம். மேலும் படிக்க
08:40 AM (IST) Apr 21
டுவிட்டர் நிறுவனம் திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலின், தளபதி விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் தோனி உள்பட ஏராளமான பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கி உள்ளது. மேலும் படிக்க
08:28 AM (IST) Apr 21
இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்திருப்பது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
07:33 AM (IST) Apr 21
உத்தவ்தாக்கரே தன் கட்சி விதிகளை திருத்தியதை குற்றம் என கடிந்து கொண்டு தண்டித்த நீதிமன்றங்கள். எடப்பாடிக்கு மட்டும் கேட்டதை கேட்ட நேரத்தில் தீர்ப்பாக தருகிறது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
07:09 AM (IST) Apr 21
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது தற்காலிக முடிவுதான். தற்போதைய முடிவு நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் இபிஎஸ்க்கு அங்கீகாரம் கிடைத்ததாக கருத முடியாது.