கர்நாடக தேர்தல் 2023: திப்பு சுல்தான் பிறந்த இடம்! ஆப்ரேஷன் தாமரை - அஸ்திரத்தை எடுத்த அமித்ஷா..!
கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அமித்ஷா இன்று முதல் முறையாக வருகை தர உள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடக்கிறது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
கர்நாடகாவில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம், வாக்குறுதிகள், கட்சிகளின் வியூகம் என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் பாஜகவை எப்படியாவது தோற்கடித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
18ஆம் நூற்றாண்டின் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானின் பிறந்த இடமான தேவனஹள்ளியில் இன்று அமித்ஷா பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா வெள்ளிக்கிழமை இரண்டு நாள் பயணமாக கர்நாடகாவுக்குச் சென்று பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள தேவனஹள்ளியில் சாலைப் பேரணியில் பங்கேற்க உள்ளார்.
இதையும் படிங்க..அட்சய திரிதியை அப்போ இதையெல்லாம் தானமா கொடுங்க.! லட்சுமி கடாட்சம் வரும்! செல்வம் கொட்டும்!!
கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளார். மார்ச் 29 ஆம் தேதி தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு அமித்ஷா இம்மாநிலத்திற்கு வருவது இதுவே முதல் முறை. அமித்ஷா தனது நிகழ்ச்சி அட்டவணையின்படி, 18 ஆம் நூற்றாண்டின் மைசூரு ஆட்சியாளர் திப்பு சுல்தானின் பிறந்த இடமான தேவனஹள்ளியின் தாலுகாவில் இன்று பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
சாலை வழியிலான பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அமித்ஷா இன்று மாலையில் கூட்டம் நடத்துவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. தேவனஹள்ளியில், மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜகவின் பில்லா முனிஷாமப்பாவை ஆதரித்து பிரச்சாரம் செய்வார்.
இதையும் படிங்க..அரசியலில் குதிக்கும் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு? யார் கட்சியில் தெரியுமா? வேற மாறி.!!
அவர் சிட்டிங் எம்.எல்.ஏ எல்.என் நாராயணசாமி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஏழு முறை எம்.பி.யுமான காங்கிரஸ் வேட்பாளர் கே.எச்.முனியப்பா ஆகியோருக்கு எதிராக போட்டியிடுகிறார். 2019 லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த முனியப்பா, முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்குகிறார். 2018 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸின் நாராயணசாமி (86,966 வாக்குகள்) மற்றும் வெங்கடசாமி (69,956) இடையே முக்கியமாக போட்டி இருந்தது. பாஜக வேட்பாளர் கே.நாகேஷ் 9,820 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தார்.
கர்நாடகாவில் மே 10ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 3,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மொத்தம் 5,102 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 13ஆம் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மொத்தம் 4,710 வேட்பு மனுக்கள் 3,327 ஆண்களும், 391 வேட்புமனுக்கள் 304 பெண்களும் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ