மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரம்.. நாளை முதல்வர் இபிஎஸ்.. எஸ்.பி.வேலுமணி அதிரடி சரவெடி..!
எடப்பாடியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்திருப்பது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அஇஅதிமுக -வின் பொதுக்குழு தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதன் மூலம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் எஃகு கோட்டையான அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க;- இது தற்காலிக முடிவு தான்.. தேர்தல் ஆணையம் என்ன சொல்லி இருக்கு கவனிச்சீங்களா.. பாயிண்டை பிடித்த பண்ருட்டியார்.!
இது மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரம். கழகத்தின் பொதுச் செயலாளராக மாண்புமிகு அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பது, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
மாண்புமிகு அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்கள் தான் மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என தமிழக மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் விரோத திமுக அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டி, அண்ணன் எடப்பாடியார் அவர்களை விரைவில் தமிழக முதலமைச்சராக அரியணை ஏற்றுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்... தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தகவல்!!