கர்நாடக தேர்தல் 2023: 75/53.. இதென்ன கணக்கு.! புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்த பாஜக மற்றும் காங்கிரஸ்.!!
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஒரே கட்டமாக மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸும், ஐக்கிய ஜனதா தளமும் தீவிரம் காட்டுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது. நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில், பாஜக 222 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 216 இடங்களுக்கும் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருகட்சிகளைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். 3,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மொத்தம் 5,102 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வியாழக்கிமையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது.மொத்த வேட்புமனுக்களில், 4,710 வேட்புமனுக்களை 3,327 ஆண் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
391 வேட்புமனுக்களை 304 பெண் வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். மாற்றுப்பாலினத்தவரால் ஒரு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கர்நாடக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 707 வேட்புமனுக்களை பாஜகவைச் சேர்ந்தவர்களும், 651 காங்கிரஸ் உறுப்பினர்களும், 455 மனுக்களை ஜேடிஎஸ் தொண்டர்களும், மற்றவை சுயேட்சை மற்றும் இதர சிறுசிறு கட்சியினரும் தாக்கல் செய்துள்ளனர்.
மொத்த விவரங்கள்:
பாஜக - 224
காங்கிரஸ் - 223
ஜேடிஎஸ் - 211
பாஜக வேட்பாளர் விவரம்:
புதிய முகங்கள் - 75
டிகிரி வைத்திருப்பவர்கள் - 134
முதுகலை பட்டதாரிகள் - 37
பியுசி தேர்ச்சி - 26
வர்த்தகர்கள் - 147
பெண்கள் - 12
லிங்காயத்துகள் - 68
காங்கிரஸ் வேட்பாளர் விவரம்:
புதிய முகங்கள் - 53
பெண்கள் - 11
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு - 3
லிங்காயத்துகள் - 51
வொக்கலிகள் - 53
முஸ்லிம்கள் - 14
SC, ST வேட்பாளர்கள் - 36
இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ