Asianet News TamilAsianet News Tamil

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் டி.கே சிவகுமாரின் மனு தள்ளுபடி.. அடுத்தடுத்து அதிரடி !!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் டிகே சிவகுமாரின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Karnataka HC dismisses DK Shivakumar's plea in disproportionate assets case
Author
First Published Apr 21, 2023, 1:11 PM IST | Last Updated Apr 21, 2023, 4:23 PM IST

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் டிகே சிவகுமாரின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தனக்கெதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரிக்கக் கோரும் பாரதிய ஜனதா தலைமையிலான மாநில அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

Karnataka HC dismisses DK Shivakumar's plea in disproportionate assets case

கனகபுரா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார். இவரது வேட்புமனு நிராகரிக்கும்பட்சத்தில் இவரது சகோதரர் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார். அவரது மனுவும் நிராகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. டிகே சிவகுமார் காங்கிரஸ் வேட்பாளர் என்று பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா இரண்டரை மாதங்கள், சிவகுமார் இரண்டரை மாதங்கள் என்று கூறப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கு - கர்நாடகா அரசு இவருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோருகிறது. இதை எதிர்த்து மனு தாக்கல் செய்கிறார். இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தம்மை விசாரிக்க சிபிஐக்கு மாநில அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து டிகே சிவகுமார் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர், தனது கடைசி மூச்சு வரை போராடுவேன் என்றார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..போன் வாங்க போறீங்களா? 2023ல் வெளிவரும் டாப் 5 மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்ஸ் லிஸ்ட் இதோ

இதையும் படிங்க..அரசியலில் குதிக்கும் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு? யார் கட்சியில் தெரியுமா? வேற மாறி.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios