கடவுளே இது மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது.. தந்தை இறந்த சோகத்திலும் 10-ம் வகுப்பு தேர்வை எழுதிய மாணவி.!

 10ம் வகுப்பு இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வுக்கு  மாணவி ஜெயலட்சுமி தயாராகி வந்தார். இந்நிலையில், தந்தை மூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

student who wrote her 10th class exam despite her father death

சென்னையில் தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிக்கு சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர்.

சென்னை திருவொற்றியூர் பெரியமேட்டுப்பாளையத்தில் உள்ள 1வது தெருவைச் சேர்ந்த மூர்த்தி(57). இவரது மனைவி பவானி. இவர்களுக்கு பொற்செல்வி (21), ஜெயலட்சுமி(16) ஆகிய மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் பொற்செல்வி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2வது மகள் ஜெயலட்சுமி அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். 

இதையும் படிங்க;- தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் சம்பவம்! பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்! குற்றவாளியை நெருங்கிய சிபிசிஐடி போலீஸ்.!

இதனிடையே 10ம் வகுப்பு இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வுக்கு  மாணவி ஜெயலட்சுமி தயாராகி வந்தார். இந்நிலையில், தந்தை மூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தந்தை இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் ஜெயலட்சுமி கதறி அழுதார். தந்தை இறந்த நிலையில் எப்படி தேர்வு எழுத செல்வது என கலங்கினார். 

இதையும் படிங்க;-  இது தற்காலிக முடிவு தான்.. தேர்தல் ஆணையம் என்ன சொல்லி இருக்கு கவனிச்சீங்களா.. பாயிண்டை பிடித்த பண்ருட்டியார்.!

இதனையடுத்து, ஜெயலட்சுமிக்கு  தாய் மற்றும் உறவினர்கள், தோழிகள் ஆகியோர் ஆறுதல் கூறி ஜெயலட்சுமி தேர்வு எழுத பள்ளிக்கு அழைத்து சென்றார். இதனைத் தொடர்ந்து கண்கலங்கிய படி மாணவி ஆதிலட்சுமி தேர்வை எழுதினார். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தேர்வு எழுதி முடிக்கும் வரை தந்தையின் சடலத்தை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் காத்திருந்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios