பயங்கரவாத தாக்குதல்: 5 இந்திய ராணுவ வீரர்களை காவு வாங்கியது யார்? ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ரஜோரியில் ராணுவ டிரக் மீது தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் நேற்று ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். மழை மற்றும் வெளிச்சத்தை சாதகமாகி அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஜோரி செக்டாரில் பிம்பர் காலி என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் சங்கியோடி பகுதிக்கு மாலை 3 மணியளவில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆதாரங்களின்படி, முதற்கட்ட விசாரணையில் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இராணுவ டிரக் மீது மூன்று திசைகளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சீன ஆயுத தொழிற்சாலை ஒன்றின் முத்திரையுடன் கூடிய வெடிமருந்துகளுடன் 7.62 மிமீ ஸ்டீல் கோர் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 7.62 மிமீ தோட்டாக்கள் கவசம் துளைக்கும் சுற்றுகள் கொண்டதாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் எரிபொருள் டேங்க் உள்ளே இருந்து வெடித்தது என்றும், வாகனத்தின் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், டிரக்கை வெடிக்கச் செய்ய பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஹவில்தார் மன்தீப் சிங், லான்ஸ் நாயக் தேபாஷிஷ் பஸ்வால், லான்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிபாய் ஹர்கிரிஷன் சிங் மற்றும் சிபாய் சேவக் சிங் ஆகிய 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், படா-டோரியா பகுதியின் அடர்ந்த காடுகளில் பாதுகாப்புப் படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை மோப்பம் பிடிக்க ஆளில்லா விமானங்கள் மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் இரட்டை எல்லை மாவட்டங்களான ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளிலும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..அரசியலில் குதிக்கும் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு? யார் கட்சியில் தெரியுமா? வேற மாறி.!!
இதையும் படிங்க..iQOO : இப்படியொரு ஆஃபர் கிடைக்காது.. iQOO ஸ்மார்ட்போன்களுக்கு 25,000 வரை ஒரிஜினல் தள்ளுபடி - முழு விபரம்