இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், அதிமுக, சினிமா செய்திகள், கொரோனா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
11:43 PM (IST) May 23
NITTTR சென்னையில் பல்வேறு மத்திய அரசு வேலைகள்! 12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இளநிலை செயலக உதவியாளர் பணிக்கு ரூ.25,500 சம்பளம். ஜூன் 24, 2025க்குள் விண்ணப்பிக்கவும்.
11:31 PM (IST) May 23
இந்தியன் வங்கியில் ஆலோசகர் பணியிடங்கள்! தேர்வு இல்லை, நேர்காணல் மட்டும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள். மே 31, 2025-க்குள் விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.40,000
11:20 PM (IST) May 23
நீங்கள் முனைவர் பட்டம் பெற்றவுடன், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி முதல் கார்ப்பரேட் வேலைகள் மற்றும் ஆலோசனை வரை, அனைவருக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. சலுகைகள் என்ன? அதிக சம்பளம், நிலையான வேலைகள் மற்றும் நீண்ட கால வளர்ச்சி.
11:02 PM (IST) May 23
59,000 பேரிடம் எஸ்டோனியாவில் நடந்த ஆய்வு, பணம், பதவி தாண்டி, நோக்கம் மற்றும் சாதனை உணர்வே வேலை திருப்தியைத் தரும் எனக் கூறுகிறது. உலகின் அதிக மற்றும் குறைவான மனநிறைவு தரும் வேலைகளைக் கண்டறியுங்கள்.
10:47 PM (IST) May 23
₹25,000-க்குக் கீழே உள்ள ஸ்மார்ட்போன் சந்தை, சிறப்பான அம்சங்களைக் கொண்ட விருப்பங்களுடன் களைகட்டுகிறது. இந்த போன்கள் சக்திவாய்ந்த செயலிகள், அதிக புதுப்பிப்பு வீதக் காட்சிகள், அசத்தலான கேமராக்கள் மற்றும் நீண்ட கால பேட்டரிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
10:41 PM (IST) May 23
அமெரிக்க ஆய்வு ஒன்று, சுயநலம் என்பது நம் டிஎன்ஏவில் 'இன்ட்ரோனர்' மரபணுக்களால் குறியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கிறது. இனங்களுக்கு இடையில் தாவும் இந்த ஒட்டுண்ணி மரபணு கூறுகள், மரபணு பரிணாமம் குறித்த நமது புரிதலை மறுவரையறை செய்கின்றன.
10:35 PM (IST) May 23
10:17 PM (IST) May 23
ஜிம்மி டொனால்ட்சன், 27 வயதில் $1 பில்லியன் சொத்து மதிப்புடன் உலகின் இளைய சுயமாகச் சம்பாதித்த பில்லியனராகிறார். கேமிங் வீடியோக்களில் இருந்து உலகளாவிய உள்ளடக்கம், பரிசளிப்புகளின் சாம்ராஜ்யம் வரை அவரது பயணத்தை அறிந்து கொள்ளுங்கள்.
09:28 PM (IST) May 23
08:02 PM (IST) May 23
திமுக வட்ட செயலாளர் மீது மாமூல் கேட்டு தாக்குதல் நடத்தியதாகவும், குவாரி உரிமையாளரிடமிருந்து ₹75 லட்சம் வசூலித்ததாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
07:56 PM (IST) May 23
தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வது மக்களுக்காக அல்ல, கூட்டணி பலவீனத்தை சரிசெய்யவே என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
07:42 PM (IST) May 23
07:13 PM (IST) May 23
ஜெய்ப்பூர் இனிப்புக் கடை உரிமையாளர் 'மைசூர் பாக்'கை 'மைசூர் ஶ்ரீ' எனப் பெயர் மாற்றியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு மத்தியில் தேசிய உணர்வால் உந்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
06:50 PM (IST) May 23
பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை வாயுத்தொல்லை தான். எந்த உணவு சாப்பிட்டாலும் வாவு ஏற்பட்டு, அதனால் வயிற்று வலியால் பாடாய்படுவார்கள். இந்த அவஸ்தை உங்களுக்கும் இருந்தால் காலையில் 7 விஷயங்களை கண்டிப்பாக செய்யுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
06:24 PM (IST) May 23
நாம் வீட்டில் எவ்வளவு தான் பார்த்து பார்த்து செய்தாலும் கோவிலில் கொடுக்கும் பொங்கலின் மணம், சுவைக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது. அந்த பொங்கலை அதே மணம், சுவையுடன் வீட்டில் எப்படி செய்வது என தெரிய வேண்டும். இதோ சமையல் ரெசிபி உங்களுக்காக...
06:02 PM (IST) May 23
ஐபிஎல் 2025 சீசனில் முதல் 2 இடங்களை பிடிக்க 4 அணிகள் போட்டி போடுகின்றன. இதில் அதிக வாய்ப்புள்ள அணிகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.
05:57 PM (IST) May 23
ஐபோன்களை அமெரிக்காவிலேயே தயாரிக்கவில்லை என்றால், ஆப்பிள் நிறுவனத்திற்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையால் ஆப்பிளின் பங்குகள் 2.5% சரிந்தன.
05:41 PM (IST) May 23
என்ன தான் மழை பெய்தாலும் கோடை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாத நிலை தான் உள்ளது. என்ன செய்தாலும் உஷ்ணம் குறையவில்லை என கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இந்த 8 டிப்சை கடைபிடித்து பாருங்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் உடம்பை கூலாக வைத்துக் கொள்ளலாம்.
05:30 PM (IST) May 23
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளது. கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
05:27 PM (IST) May 23
திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் ஹன்சிகா மோத்வானி போன்றவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
05:16 PM (IST) May 23
இந்த நான்கு குணங்களும் பெண்களிடம் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை சாணக்கியர் விளக்குகிறார்.
05:01 PM (IST) May 23
நீண்ட நாட்கள் பயன்படுத்தாத உருளைக்கிழங்கில் முளை விட துவங்கும். அதற்கு பிறகு அந்த உருளைக்கிழங்கை தூக்கி போட மனமில்லாமல் சமையலுக்கு பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து தான். முளைத்த உருளைக்கிழங்க தவிர்க்க வேண்டிய காரணம் இதோ...
04:59 PM (IST) May 23
04:51 PM (IST) May 23
ஆர்சிபி வீரர் ஜோஸ் ஹேசில்வுட் இந்தியா திரும்புவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
04:49 PM (IST) May 23
அமெரிக்க விமானப்படை புதன்கிழமை ஆயுதம் ஏற்றப்படாத மினிட்மேன் III கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
04:47 PM (IST) May 23
தசை நார்கள் பலம் இழக்கும் போது கைகள், தொடை பகுதிகளில் இருக்கும் தசைகள் தொளதொள என தொங்கும் நிலை ஏற்படும். இதனால் அந்த பகுதிகள் குண்டாக இருப்பது போல் இருக்கும். இவற்றை விரைவில் சரி செய்ய எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்தாலே போதும்.
04:30 PM (IST) May 23
ஆன்லைன் மேட்ரிமோனி தளங்களில் வரன் தேடும்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய 7 விஷயங்களை இங்கு காணலாம்.
04:28 PM (IST) May 23
கேரளாவில் நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல், ஹிந்தியை பிறகு கற்றுக் கொள்ளலாம், முதலில் பக்கத்து மாநிலத்தில் பேசும் மொழியை கற்றுகொள்ளுங்கள் என பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
04:26 PM (IST) May 23
சமையலுக்கு நாம் பலவிதமான எண்ணெய்களை பயன்படுத்துவது உண்டு. ஆனால் சில எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்த தகுதி அற்றவை என சொல்லப்படுகிறது. குடும்ப ஆரோக்கியத்தை காக்க எந்தெந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
04:25 PM (IST) May 23
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஆதரவைத் திரட்ட இந்தியா ஒரு பெரிய சர்வதேச பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. 32 நாடுகளுக்கு ஏழு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுக்களை அனுப்பியுள்ளது,
04:22 PM (IST) May 23
மைக்ரோசாஃப்ட் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, இதில் பெரும்பாலோர் மென்பொருள் பொறியாளர்கள். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதே இதற்குக் காரணம்.
04:18 PM (IST) May 23
நடிகை நயன்தாரா நடித்து சமீபத்தில் வந்த திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வரவேற்பை தவற விடுகிறது. இந்த நிலையில் நயன்தாரா முக்கிய முடிவை எடுத்துள்ளார். இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
03:54 PM (IST) May 23
பெங்களூருவுக்கு மலிவான விமானம்: நீங்கள் விரைவில் போபாலில் இருந்து பெங்களூருவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், மிகக் குறைந்த பணத்தில் விமான டிக்கெட் கிடைக்கிறது. இதன் மூலம் உங்கள் பணத்தையும், பல மணி நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
03:50 PM (IST) May 23
இன்றைய பரபரப்பான உலகில் ஆண்களை விட பெண்களுக்கு தங்களின் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள நேரம் இருப்பதில்லை. நேரம் ஒதுக்க முடியாத பெண்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு சில எளிய உடல்பயிற்சிகள் உள்ளன. இவற்றை ஈஸியா தினமும் செய்யலாம்.
03:48 PM (IST) May 23
தமிழ்நாட்டில் நியாயவிலைக்கடைகளில் 100% ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
03:47 PM (IST) May 23
ஹோண்டா மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) குஜராத்தில் உள்ள விட்டலாபூர் உற்பத்தி மையத்தில் ரூ.920 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
03:25 PM (IST) May 23
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ஜோடியின் விவாகரத்து வழக்கில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
03:25 PM (IST) May 23
03:16 PM (IST) May 23
03:04 PM (IST) May 23
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய லைகா ப்ரொடக்ஷன்ஸ் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன? லைகா ப்ரொடக்ஷன்ஸ் மீண்டு வருமா? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.