MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒரு கோடி ரூபாய் கொடுக்கனும்.! இல்லைனா குடும்பத்தையே கொல்லுவோம்.! எஸ்.பி.வேலுமணிக்கு பகீர் மிரட்டல்

ஒரு கோடி ரூபாய் கொடுக்கனும்.! இல்லைனா குடும்பத்தையே கொல்லுவோம்.! எஸ்.பி.வேலுமணிக்கு பகீர் மிரட்டல்

அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. கோவையில் வெடிகுண்டு வெடிப்பு நடத்தப்போவதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் குடும்பத்தில் 3 பேரை கொல்வோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : May 23 2025, 03:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்
Image Credit : our own

எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவர் எஸ்.பி.வேலுமணி, இந்த நிலையில் கொலை மிரட்டல் விடுத்து அவரது வீட்டிற்கே வந்துள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோவை புறநகர் மாவட்டகழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன் தலைமையில் மாவட்ட காவல் ஆணையாளரிடம் புகாரளிக்கப்பட்டது. 

அந்த புகாரில் ஜூலை 30, 2025 முடிவதற்குள் கோவையில் வெடிகுண்டு வெடிப்புநடக்க உள்ளது. நாங்கள் உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம். எங்களுடையா நபர்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். போலீஸ் டிபார்ட்மென்ட்ல கூட நம்ம ஆளுங்க இருக்கோம். உங்கிட்டா நிறைய கருப்பு பணம் இருக்கு அதுக்கு எங்க ஆதாரம் இருக்கு.

24
ஒரு கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல்
Image Credit : our own

ஒரு கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல்

1 கோடி பணம் பையில் வச்சு நா சொல்ற எடத்துக்கு வந்து வச்சுடு. நீ வரலாம் இல்லைனா உன்னோட டிரைவர் வரலாம். பண பையை பிற்பகல் 2.00 மணி முதல் 2.30 மணி வரை (25.05.2025) இடத்தில் வைக்கவும். நேரத்தை தவற விடாதீர்கள். சரி ஆ காளப்பட்டி வெள்ளாணைப்பட்டி ரோடு ல கலிய பெருமாள் குட்டை கிட்ட குப்பை மேட்டுல பை ஆ வச்சுட்டு நீ போயிடலாம். என்னோட ஆலுங்க அந்த பை ஆ எடுதுபங்க. உங்க பையில எந்த ஜிபிஎஸ் டிராக்கிங் டிவைஸையும் வச்சுக்காதீங்க. 3 நாட்களுக்குப் பிறகு, அதே பையில அதே இடத்துல உங்க ஈமேயில் ஐடியுடன் ஒரு ரகசிய குறியீட்டைப் பெறுவீர்கள். கொடுக்கப்பட்ட மின்னஞ்சலுடன் அந்தக் குறியீட்டைப் பகிரவும். சரியான இருப்பிடக் குறிக்கு இந்தப் பக்கத்தின் பின்புறத்தைப் பார்க்கவும்.

Related Articles

Related image1
Now Playing
ADMK - BJP சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல தமிழக மக்களின் நலன் சார்ந்த கூட்டணி! நயினார் நாகேந்திரன் பேட்டி
Related image2
SP Velumani : வருமானத்தை விட 3,928% மடங்கு அதிகமாக சொத்து குவிப்பு.. எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு !!
34
எஸ்.பி.வேலுமணி குடும்பத்தை கொலை செய்வோம்
Image Credit : our own

எஸ்.பி.வேலுமணி குடும்பத்தை கொலை செய்வோம்

இப்படிச் செய்தால் எங்க பக்கத்துல இருந்து எந்தப் பிரச்சனையும் வராது. இல்லைன்னா நீங்க போலீசுக்குப் போனாலோ, எங்களைப் பிடிக்க முயற்சித்தாலோ உங்க குடும்பத்துல 3 பேரை 3 மாதங்களுக்குள் கொல்வோம். இது வெறும் மெசேஜ் இல்ல, இது எச்சரிக்கை. இது உயிர் கேடு என எழுதப்பட்டுள்ளது மேலும் அதன் பின் பக்கத்தில் Google Map வரைபடம் ஒன்றும், அதில் "Drop the Bag here" என்று கையில் எழுதப்பட்டிருந்தது.

மேற்படி கடிதத்தின் மூலம் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும் தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் பிரதிநிதியுமான S.P. வேலுமணி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், கோவையில் வெடிகுண்டு வெடிக்க சதி செய்ய திட்டமிட்டும், மேலும் அவரிடமிருந்து பணத்தை அபகரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் கடிதம் வந்துள்ளதாகவும், S.P. வேலுமணி அவர்களையும் அவரது குடும்பத்தில் உள்ள 3 பேரையும் 3 மாதத்திற்குள் கொல்வோம் என்றும் எச்சரிக்கை மிரட்டல் விடுத்துள்ள நபர்களிடமிருந்து

44
எஸ்.பி.வேலுமணிக்கு பாதுகாப்பு கொடுங்க
Image Credit : our own

எஸ்.பி.வேலுமணிக்கு பாதுகாப்பு கொடுங்க

எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.பி. வேலுமணி அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்களது உடைமைக்கும் உயிருக்கும் தக்க பாதுகாப்பு கொடுத்தும், மேலும் கோவையில் எந்தவித அசம்பாவிதம் நடக்கா வண்ணம் பாதுகாப்பு கொடுத்தும் மேற்படி நபர்களை யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும என கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
எஸ். பி. வேலுமணி
கோயம்புத்தூர்
அரசியல்
குற்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Related Stories
Recommended image1
Now Playing
ADMK - BJP சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல தமிழக மக்களின் நலன் சார்ந்த கூட்டணி! நயினார் நாகேந்திரன் பேட்டி
Recommended image2
SP Velumani : வருமானத்தை விட 3,928% மடங்கு அதிகமாக சொத்து குவிப்பு.. எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு !!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved