- Home
- Sports
- Sports Cricket
- IPL 2025: முதல் 2 இடங்களை பிடிக்க 4 அணிகள் போட்டி! ஆர்சிபி, மும்பைக்கு வாய்ப்பு எப்படி?
IPL 2025: முதல் 2 இடங்களை பிடிக்க 4 அணிகள் போட்டி! ஆர்சிபி, மும்பைக்கு வாய்ப்பு எப்படி?
ஐபிஎல் 2025 சீசனில் முதல் 2 இடங்களை பிடிக்க 4 அணிகள் போட்டி போடுகின்றன. இதில் அதிக வாய்ப்புள்ள அணிகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.

IPL 2025: 4 teams compete for top 2 spots
ஐபிஎல் 2025 சீசன் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளேஆஃபுக்குத் தகுதி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்கள் பிடித்தால் இறுதிப்போட்டி செல்ல கூடுதல் வாய்ப்புகள் இருப்பதால் முதல் இரண்டு இடங்களுக்கான போட்டி விறுவிறுப்பாக உள்ளது.
ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் 4 அணிகள்
குஜராத், மும்பை அணிகளுக்கு தலா ஒரு லீக் போட்டியும், பஞ்சாப், பெங்களூரு அணிகளுக்கு தலா இரண்டு லீக் போட்டிகளும் உள்ளன. இதில் லக்னோவிடம் தோல்வியடைந்ததால் குஜராத் அணியின் முதல் இரண்டு இடம் பிடிக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. ஆனால் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில், 13 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகள் (+0.602) பெற்று குஜராத் முதலிடத்தில் உள்ளது. 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் (+0.482) பெற்று பெங்களூரு இரண்டாம் இடத்தில் உள்ளது.
டாப் இரண்டு இடங்களை பிடிக்க 4 அணிகள் போட்டி
12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் (+0.389) பெற்று பஞ்சாப் மூன்றாம் இடத்தில் உள்ளது. 13 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் (+1.292) பெற்று மும்பை நான்காம் இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் 21 புள்ளிகளை எட்டி முதல் இரண்டு இடங்களுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
குஜராத்துக்கு வாய்ப்பு எப்படி?
புள்ளிப்பட்டியலில் குஜராத் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால் அந்த அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டுமே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றால் குஜராத் 20 புள்ளிகளைப் பெறும். பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 21 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும்.
மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி
மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தினால் 18 புள்ளிகளைப் பெறும். குஜராத் தனது கடைசிப் போட்டியில் சென்னையிடம் தோல்வியடைந்தால் 18 புள்ளிகளுடனேயே இருக்கும். பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் தங்கள் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 21 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிக்கும்.
அதே வேளையில் இரண்டிலும் தோல்வி அடைந்தால் 17 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் 4ம் இடங்களை பிடிக்கும். அதே நேரம் 18 புள்ளிகளுடன் குஜராத் மற்றும் மும்பை முதல் இரண்டு இடங்களை பிடிக்கும். ஆனால் இது நடக்க குறைவான வாய்ப்பே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.