ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணி 231 ரன்கள் குவிப்பு; அதிரடியில் நொறுங்கியது கார் கண்ணாடி
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 231 ரன்கள் குவித்துள்ளது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இசான் கிஷன் 94 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் போட்டி -RCB vs SRH
ஐபிஎல் பிளே ஆப் போட்டிக்கு குஜராத், பெங்களூர், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று லக்னோவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வழிநடத்தினார். மே 3 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபியின் கடைசி போட்டியில் பீல்டிங் செய்யும் போது ரஜத் விரலில் காயமடைந்தார். 20 நாட்கள் ஓய்வுக்குப் பிறகும், ரஜத் படிதார் விரல் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை.
அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடி
மறுபுறம், சன்ரைசர்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டிக்கு டிராவிஸ் ஹெட்டை மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்த்தது. கொரோனா பாதிப்பு குணமடையாததால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியைத் தவறவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. துவக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தால் 3 ஓவர்களிலேயை 50 ரன்னை நெருங்கியது. அப்போது அபிஷேக் ஷர்மா அடித்த பந்து மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை பதம் பார்த்தது.
கார் கண்ணாடி உடைந்தது
ரசிகர்கள் துள்ளி குதித்துக்கொண்டிருந்த நிலையில் 17 பந்தில் 34 ரன்கள் எடுத்து அபிஷேக ஷர்மா ஆட்டமிழந்தார். அடுத்ததாக டிராவிஸ் ஹெட்டும் 10 பந்தில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த இசான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 200தாண்டியது.
20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை எடுத்தது. இசான் கிஷன் 48 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து 232 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூர் அணி விளையாடி வருகிறது.
232 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஐதரபாத்
ஆர்சிபி vs எஸ்ஆர்ஹெச்: அணி செய்திகள்
ஆர்சிபி லெவன்: விராட் கோலி, பில் சால்ட், மயங்க் அகர்வால், ஜிதேஷ் சர்மா (கே/வி.கீ), ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், லுங்கி எங்கிடி, யஷ் தயாள், சுயாஷ் சர்மா.
இம்பேக்ட் சப்ஸ்: ரஜத் படிதார், ரசிக் சலாம், மனோஜ் பாண்ட்கே, ஜேக்கப் பெத்தேல், சுப்னில் சிங்.
எஸ்ஆர்ஹெச் லெவன்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (வி.கீ), அனிகேத் வர்மா, அபிநவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கே), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், இஷான் மாலிக்.
இம்பேக்ட் சப்ஸ்: முகமது ஷமி, ஹர்ஷ் துபே, சச்சின் பேபி, ஜீஷன் அன்சாரி, சிமர்ஜீத் சிங்.