இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:06 PM (IST) Aug 14
ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளின் வரலாறும், அதிக வெற்றிகளை பெற்று கெத்து காட்டியது யார்? என்பது குறித்தும் பார்ப்போம்.
11:06 PM (IST) Aug 14
தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம், தமிழக அரசு வெளியிட்டுள்ள 6 புதிய திட்டங்கள், மீண்டும் ஜம்மு காஷ்மீரில் நடந்த மேக வெடிப்பு என இன்றைய தினத்தின் டாப் 10 முக்கியச் செய்திகளைக் கொண்ட தொகுப்பு இது.
10:47 PM (IST) Aug 14
Mercury Nakshatra Transit 2025 Palan in Tamil : ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் பகவான் சிம்ம ராசியில் வரக் கூடிய மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்த சஞ்சாரம் சில ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளை அளிக்க உள்ளது. அதை பற்றி பார்க்கலாம்.
10:38 PM (IST) Aug 14
முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார்.
10:14 PM (IST) Aug 14
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் சிவன் ஸ்துதி ஒலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
09:28 PM (IST) Aug 14
Soubin Shahir impresses in Coolie Movie : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் கூலி படத்தில் மலையாள நடிகரான சௌபின் ஷாகீர் தனது நடிப்பு மற்றும் டான்ஸ் திறமையின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.
09:14 PM (IST) Aug 14
08:49 PM (IST) Aug 14
Rahu Ketu Retrograde 2025 : ராகு சனி பகவானின் கும்ப ராசியிலும், கேது சூரிய பகவானின் சிம்ம ராசியிலும் சஞ்சரிக்கிறது. இந்த ஆண்டு ராகு மற்றும் கேதுவின் வக்ரம் சஞ்சாரம் சில ராசிகளுக்கு நன்மை பயக்கும்.
08:39 PM (IST) Aug 14
நாக்பூரின் ஏஜெண்டாக ஆர்எஸ்எஸ் மனநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக திமுக அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இதன்மூலம் ஆளுநர், திமுக இக்டையிலான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
08:29 PM (IST) Aug 14
08:11 PM (IST) Aug 14
Revathi Mind Voice during Karthik Help Scene : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தீமிதி திருவிழாவில் காலில் அடிபட்டதாக சொல்லி கார்த்திக்கை மருந்து போட வைக்கும் போது ரேவதி மைண்ட் வாய்ஸில் சத்தமாக பேசியுள்ளார்.
07:54 PM (IST) Aug 14
07:46 PM (IST) Aug 14
சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு மட்டும் 20,000 தெருநாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன.
07:23 PM (IST) Aug 14
Lokesh Kanagaraj Movies Contract Killer Revealed : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ஒவ்வொரு படத்திலேயும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மர்டர் செய்த நிலையில் கூலி படத்தில் அவர் எந்த கேரக்டரை குளோஸ் பண்ணிருக்கிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
06:59 PM (IST) Aug 14
ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையான நண்பர்களாக இருப்பார்களாம். அவர்கள் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவில் காணலாம்.
06:09 PM (IST) Aug 14
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் சுதந்திர தின தேநீர் விருந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகள் தமிழக நலன்களுக்கு எதிரானது என முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார்.
06:07 PM (IST) Aug 14
‘‘பாகிஸ்தான் தனது பேச்சுக்களைக் கட்டுப்படுத்துமாறு நாங்கள் எச்சரிக்கிறோம். எந்தவொரு நடவடிக்கைக்கும் அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும்''
06:06 PM (IST) Aug 14
இந்தியாவின் தென் மாநிலங்களில் அசைவ உணவு பிரியர்கள் அதிகம். ஆனால் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS) அறிக்கையின்படி, எதிர்பாராத ஒரு மாநிலம் அசைவ உணவு உட்கொள்வதில் முதலிடத்தில் உள்ளது.
06:02 PM (IST) Aug 14
Revathi Wants two childs in Karthigai Deepam 2 Serial Update : தனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் வேண்டும் என்று கார்த்திக்கை ரேவதி வெறுப்பேற்றும் நிலையில் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
05:57 PM (IST) Aug 14
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
05:56 PM (IST) Aug 14
ஒரே இரவில் முகத்தில் இருக்கும் பருக்களை மறையச் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
05:38 PM (IST) Aug 14
இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி அவசியமான ஒன்றாகிவிட்டது. எந்த உணவை எடுத்தாலும் குளிர்சாதன பெட்டியில் நிரப்பி விடுகிறார்கள். ஆனால், குளிர்சாதனப் பெட்டியில் எல்லா உணவுப் பொருட்களையும் வைக்கக் கூடாது.
05:27 PM (IST) Aug 14
05:19 PM (IST) Aug 14
நாளை 79வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் உங்கள் நண்பர்களுக்கு மனதை தொடும் சில தேசபக்தி வாழ்த்துக்கள், செய்திகள் இங்கே.
05:09 PM (IST) Aug 14
என் வேலையும் போயிடுச்சு. எனக்கு வேலை முக்கியம் இல்ல. தலைவர் மூக்குல இருந்து விடுற மூச்சு தான் முக்கியம். அதுக்காக இன்னும் 10 தடவை கூலி படத்த பார்ப்பேன். தலைவரோட ஃபெர்பார்ம... ஆயிரம் கோடி கன்பாஃர்ம்.
04:41 PM (IST) Aug 14
தினமும் ஒரு ஸ்பூன் நெய் உங்கள் அழகை இரட்டிப்பாக்கும். நெய்யை எப்படி எடுத்துக்கொண்டால் 10 வயது இளமையாகவும் அழகாகவும் தோன்றுவீர்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
04:19 PM (IST) Aug 14
குறிப்பிட்ட தேதியில் பிறந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் கணவருக்கு உறுதுணையாக இருப்பார்களாம். அந்த தேதி என்ன? அந்த பெண்களின் குணங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:12 PM (IST) Aug 14
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவுக்கு எதிரான வர்த்தக வரிகளை அதிகரிக்க அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்-புதின் சந்திப்பு திருப்திகரமாக அமையாவிட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
04:00 PM (IST) Aug 14
தன்னுடைய 74 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிட்னஸ் ரகசியங்களை இங்கு காணலாம்.
03:59 PM (IST) Aug 14
பீர்க்கங்காய் பல்வேறு நன்மைகள் நிறைந்த ஒரு காயாகும். இதை மழைக்காலத்தில் சாப்பிடலாமா என்பது குறித்த சந்தேகங்கள் உள்ளது. அதற்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:58 PM (IST) Aug 14
Coolie : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வில்லனுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
03:48 PM (IST) Aug 14
கூலி திரைப்படம் வெளியாகி 7 மணி நேரமே ஆன நிலையில், ரஜினிகாந்த், கலாநிதி மாறன் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
03:32 PM (IST) Aug 14
நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாயில் ஹெல்மெட் போன்ற பாறையைப் படம்பிடித்துள்ளது. இந்தப் பாறை செவ்வாயின் சுற்றுச்சூழல் வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஹார்ன்ஃபிளேயா என்ற இந்தப் பாறை, கோள வடிவ துகள்களால் ஆனது.
03:26 PM (IST) Aug 14
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ஹிகோகி பவர் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
03:16 PM (IST) Aug 14
இந்திய ரயில்வேயின் சுற்றுப் பயண தொகுப்பு திட்டத்தின் கீழ், ஒரே பயணிகளின் பயணத்திற்கும், திரும்பும் பயணத்திற்கும் முன்பதிவு செய்யும் போது 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.
03:09 PM (IST) Aug 14
02:57 PM (IST) Aug 14
சுதந்திர தினத்தையொட்டி நாளை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
02:56 PM (IST) Aug 14
‘ ‘13 நாள் போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தை கடைபிடிப்பது அவரது கள்ள உள்ளத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது. போராடுவோரை நேரில் எதிர்கொண்டு பேசத் துணிவின்றி, அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கடைந்தெடுத்த கோழைத்தனமாகும்’’.
02:52 PM (IST) Aug 14
ஜம்மு காஷ்மீரின் கிஸ்ட்வார் மாவட்டத்தில் உள்ள சாஷோட்டி கிராமத்தில் இன்று அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டதால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் உயிர் சேதங்கள் குறித்த அச்சம் நிலவுகிறது.
02:47 PM (IST) Aug 14
அழுக்காக இருக்கும் சோபாவை புத்தம் புதுசாக மாற்றுவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.