நாளை 79வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் உங்கள் நண்பர்களுக்கு மனதை தொடும் சில தேசபக்தி வாழ்த்துக்கள், செய்திகள் இங்கே.

நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை. இந்தியா தனது 79வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், நம்முடைய இதயங்கள் பெருமையாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்துள்ளது. இந்நாளில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றுவார். அதன் பிறகு முப்படை அணி வகுப்புகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும்.

சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை கௌரவிப்பதற்காக தான் நாம் இந்த நாளை கொண்டாடி வருகிறோம். இந்த சுதந்திர தினத்தன்று உங்களது நண்பர்கள் குடும்பத்தினர்களின் மனதை தொடும் சில தேசபக்தி வாழ்த்துக்கள், செய்திகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பகிர்ந்து கொண்டாடி மகிழுங்கள்.

தேசப்பற்றை தூண்டும் சுதந்திர தின வாழ்த்துக்கள் 2025 :

1. சுதந்திர தின வாழ்த்துக்கள்!! இந்த நாள் நம் அனைவருக்கும் ஒற்றுமை மற்றும் செழிப்பை கொண்டு வர வாழ்த்துகிறேன்!

2. அடிமைத்தனத்தை கண்ட ஒருவரால் மட்டுமே சுதந்திரத்தின் மதிப்பை நன்றாக புரிந்து கொள்ள முடியும். சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

3. சுதந்திரம் என்பது வெறும் கொண்டாட்டம் அல்ல. இது தியாகம் மற்றும் தியாகத்தை நினைவு. ஜெய்ஹிந்த்!!

4. மனதில் சுதந்திரம் வார்த்தைகளில் நம்பிக்கை, இதயத்தில் பெருமை. எனவே, இந்த சுதந்திர தினத்தன்று நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நம் நாட்டிற்கு வணக்கம் செலுத்துவோம். சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

5. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! நாம் அனைவரும் ஒன்றிணைந்து மூவர்ணக் கூடிய உயர்த்துவோம். நாட்டை பெருமைப்படுத்துவோம்.

6. இந்த சுதந்திரத்தை நமக்கு கொடுத்த அனைத்து மாவீரர்களையும் நினைத்து நாம் பெருமைப்படுவோம். சுதந்திர தின வாழ்த்துக்கள்.

7. தேசபக்தி உணர்வை எழுப்புவோம். சுதந்திர பண்டிகையை கொண்டாடுவோம். ஒவ்வொரு இதயத்திலும் மூவர்ணக் கூடிய ஏற்றுவோம். ஜெய்ஹிந்த்!

8. உங்கள் வாழ்வில் தேச பக்தி எப்போதும் நிலைத்திருக்கட்டும். இந்திய முன்னேறட்டும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

9. இந்த சுதந்திர தினத்தன்று நம் நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து மாவீரர்களையும் நினைவு கூறுவோம். ஜெய்ஹிந்த்!

10. நம் நாடு எப்போதும் முன்னேற்றம் மற்றும் செழிப்பு பாதையில் முன்னேறிச் செல்லட்டும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

11. மூவர்ண கொடி வெறும் கொடி அல்ல. அது நம் நாட்டின் பெருமை. முக்கியமாக அது ஒவ்வொரு இந்தியனின் அடையாளம். ஜெய்ஹிந்த்!

12. நாட்டை இன்னும் சிறப்பாக மாற்ற உறுதிமொழி எடுப்போம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்!!