- Home
- Politics
- Coolie: கூலிக்கு ஆஸ்கர் அவார்டு... 13 அடி உயரத்துல தூக்கிப்போட்டு ட்ரம்ப் முகத்துல அடிக்கணும்..! வெறித்தன ஆசை..!
Coolie: கூலிக்கு ஆஸ்கர் அவார்டு... 13 அடி உயரத்துல தூக்கிப்போட்டு ட்ரம்ப் முகத்துல அடிக்கணும்..! வெறித்தன ஆசை..!
என் வேலையும் போயிடுச்சு. எனக்கு வேலை முக்கியம் இல்ல. தலைவர் மூக்குல இருந்து விடுற மூச்சு தான் முக்கியம். அதுக்காக இன்னும் 10 தடவை கூலி படத்த பார்ப்பேன். தலைவரோட ஃபெர்பார்ம... ஆயிரம் கோடி கன்பாஃர்ம்.

கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. இயக்குநர் அந்த ஹைப்பை ஏற்றவில்லை. மாறாக அதுவாகவே ஹைப்பை ஏற்றிக்கொண்டது. ரஜினியும், லோகியும் முதன்முறையாக இணைந்ததுதான் அதற்கு காரணம். படம் இன்று வெளியான சூழலில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரஜினியின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் பேசிய சிரிப்பை வரவழைக்கும் வீடியோ ஒன்றை ரோகிணி சில்வர் ஸ்கிரீன் தியேட்டர் சமூகவலைதளத்தில் பதிவேற்றியது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ‘‘எல்.ஐ.சி ஹைட்டு தலைவன் தான் வெயிட்டு... பனைமரத்துல நொங்கு தலைவனை எதிர்த்தா சங்கு...ஐயோ சூப்பர் ஸ்டாரை எதிர்த்து நாம ஒன்னும் பண்ண முடியலையேன்னு வானத்துல இருக்குற நட்சத்திரமே யோசிக்குது. வானத்துலன் இருக்குற நட்சத்திரமே அந்த மாதிரி யோகிக்கும்போது இந்த ஸ்டார்களெல்லாம் எந்த மூலைக்கு தலைவா? கிளைமேக்ஸ்ல அமீர்கான் கால்ல விழுந்துட்டானே. தலைவான்னு ஒரு சிகரெட்டை பிடிச்சாரு ரெண்டு கோடி வந்து கொட்டுது. அமீர்கான் தலைவர் எதிரே சிகரெட் பிடிக்க முடியுமா? சிகரெட்ட வானத்துல வீசி துப்பாக்கியால சுட்டு பத்த வைச்ச ஒரே ஆளு. இந்தியாவுல விடுங்க உலகத்துல யாராலும் பிடிக்க முடியுமா? அவரால மட்டும்தான் முடியும்.
ராவணனுக்கு 10 தலைனா
அங்கிளை பேர் சொல்லிக் கூப்பிட்டா தீக்குளிப்பேன். தலைவரோட மூக்கு, தலைவரோட மூக்கு... தலைவரோட கண்ணு... தலைவரோட சட்டை, தலைவரோட ஷூ இதுதான் எனக்குப்பிடிக்கும். ராவணனுக்கு 10 தலைனா அடுத்த அவதாரத்துக்கு எத்தனை தலை..? இதுக்கு என்ன பதிலு. ஒவ்வொரு அவதாரமும் ஒரு நோக்கம் கொண்டது. போடைப்பொருட்களை இந்த சமூகத்துக்கு எடுத்துட்டுப்போறத தடுக்கிற விஷயத்தை தலைவர் ஸ்கிரீன்ப்லேயில கொடுத்துருக்காரு. யார் கொண்டு போய் மக்கள்கிட்ட சேர்த்தா அது போய் சேரும்கிறது தலைவர் மூலமாக வந்திருக்கு.
ட்ரம்போட முகத்துல அடிக்கணும்
அந்த மாதிரி நன்றி கெட்ட கம்பெனியில நான் வேலை செஞ்சிருக்கேன். என் வேலையும் போயிடுச்சு. எனக்கு வேலை முக்கியம் இல்ல. தலைவர் மூக்குல இருந்து விடுற மூச்சு தான் முக்கியம். அதுக்காக இன்னும் 10 தடவை கூலி படத்த பார்ப்பேன். தலைவரோட ஃபெர்பார்மு... ஆயிரம் கோடி கன்பாஃர்மு. என் தலைவரை அடிக்க இனி இந்தியாவில மட்டும் இல்ல உலகத்திலேயே இன்னும் யாரும் பிறக்கல. இனிமேல் பிறந்தா அது 9 மாத குழந்தையாகத்தான் இருக்கும். பிறந்த குழந்தைகூட குவா குவான்னு கத்தாது கூலி கூலினுதான் கத்தும். ஆஸ்கர் அவார்டை 13 அடி உயரத்துல தூக்கிப்போட்டு ட்ரம்போட முகத்துல அடிக்கணும். இதுதான் என்னோட தாழ்மையான வேண்டுகோள்’’ எனத் தெரிவித்துள்ளார்.