- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Pimple Removal : முகப்பருக்கள் முக அழகையே கெடுக்குதா? 24 மணிநேரத்தில் நீங்க சூப்பர் டிப்ஸ்!!
Pimple Removal : முகப்பருக்கள் முக அழகையே கெடுக்குதா? 24 மணிநேரத்தில் நீங்க சூப்பர் டிப்ஸ்!!
ஒரே இரவில் முகத்தில் இருக்கும் பருக்களை மறையச் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

Pimple Removal Tips
முகத்தில் பருக்கள் வருவது ஒரு பொதுவான பிரச்சனை. பருக்கள் முகத்தின் அழகை கொடுப்பது மட்டுமல்லாமல் வலியையும் ஏற்படுத்தும். முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஹார்மோன் பிரச்சனை, மாசுக்கள், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை இதில் அடங்கும். பருக்களை நகங்களால் கிள்ளி விட்டால் அது மேலும் அதிகரிக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? இதோ உங்களுக்காக தான் இந்த பதிவு. ஆம், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஒரே இரவில் பருக்களை மறைய செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் சருமத்தை மென்மையாக்குவதோடு மட்டுமல்லாமல் பருக்களை வேகமாக மறைய செய்யவும் உதவுகிறது. இதற்கு ரோஸ் வாட்டருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அதை பருக்கள் மீது தடவி நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். தூங்கும் போது இப்படி செய்தால் ஓரிரு நாளில் பருக்கள் மறைந்து விடும். முகமும் பருக்கள் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
பூண்டு
பூண்டில் ஆன்டி-வைரஸ் மற்றும் ஆன்டி-பாக்டரியல் பண்புகள் உள்ளதால் அவை சருமத்தில் இருக்கும் தொற்றுக்களை நீங்க உதவுகிறது. முகத்தில் இருக்கும் பருக்களை சரி செய்ய, இரவு தூங்கும் முன் பூண்டை இடித்து அதன் சாற்றை பருக்கள் மீது தடவி, காலையில் சூடான நீரில் முகத்தை கழுவினால் பருக்கள் விரைவில் மறையும்.
வெள்ளரிக்காய் சாறு :
வெள்ளரிக்காயில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகமாக உள்ளன. மேலும் அது குளிர்ச்சியான தன்மையும் கொண்டுள்ளதால் இவை சருமத்தில் இருக்கும் மாசுகளை வெளியேற்றி சருமத்தை பொலிக்கும். எனவே வெள்ளரிக்காய் சாற்றை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் மறையும். முக்கியமாக பருக்கள் இருந்த வடுக்கள் கூட இருக்காது.
க்ரீன் டீ
முகத்தில் இருக்கும் பருக்களை வேகமாக விரட்டுவதில் கிரீன் டீ உதவுகிறது. ஒரு மணி நேரம் வைத்துவிட்டு பிறகு அதை கொண்டு பருக்கள் மீது ஒத்தடகம் கொடுத்து வந்தால் பருக்கள் மறையும் மற்றும் பரவினால் ஏற்பட்ட தழும்பும் மறைந்து போகும்.