Birth Date: இந்த தேதியில் பிறந்த பெண்கள் கணவருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பங்களாம்.!
குறிப்பிட்ட தேதியில் பிறந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அவர்கள் கணவருக்கு உறுதுணையாக இருப்பார்களாம். அந்த தேதி என்ன? அந்த பெண்களின் குணங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Birth Date:
ஜோதிடத்தில் எண் கணிதமும் ஒரு பகுதி. இந்த எண் கணிதம் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக நாம் பிறந்த தேதியின் அடிப்படையில் அந்த நபரின் வாழ்க்கை, ஆளுமை, எதிர்காலம் போன்ற விஷயங்களையும் அறியலாம். இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு, அந்த தேதியில் பிறந்தவர்களின் செல்வம், நல்வாழ்வு, காதல் போன்றவை இருக்கும். குறிப்பாக சில தேதிகளில் பிறந்த பெண்களின் மனம், ஆளுமை தங்கம் போல் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு கணவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். மேலும், பண விஷயத்தில் தங்கள் கணவருக்கு எந்தத் தேவை வந்தாலும், அவர்களுக்கு ஆதரவளிப்பதில் முன்னணியில் இருப்பார்கள். சரி, அந்த தேதிகள் என்னவென்று பார்ப்போமா?
எண் 6
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 6 இன் கீழ் வருகிறார்கள். இந்த எண் சுக்கிரனுடன் தொடர்புடையது. சுக்கிரனின் அருளால், இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். குறிப்பாக, இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிறார்கள். பண விஷயத்தில் தங்கள் கணவருக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள்.
பணம் செலவழிக்கத் தயங்க மாட்டார்கள்: எண் கணிதத்தின் படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் செலவழிக்க ஒருபோதும் தயங்குவதில்லை. மிகவும் தாராளமாக பணத்தை செலவிடுவார்கள். செலவு செய்தாலும், அவர்களிடம் எப்போதும் பணம் இருக்கும். இந்த தேதிகளில் பிறந்த பெண்களின் வாழ்க்கை எப்போதும் இனிமையாக இருக்கும். அவர்களுக்கு அதிகமாகப் பயணம் செய்வது பிடிக்கும். புதிய புதிய இடங்களைச் சுற்றி வருவார்கள்.
திருமண வாழ்க்கை
எண் கணிதத்தின் படி, இந்த மூன்று தேதிகளில் பிறந்த பெண்கள் சற்று அதிக உணர்ச்சிவசப்படுவார்கள். சிறிய விஷயங்களைப் பற்றிச் சொன்னாலும் உடனே உணர்ச்சிவசப்படுவார்கள். மேலும், இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் திருமணத்திற்குப் பிறகு நல்ல வாழ்க்கையை வாழ்கிறார்கள். குறிப்பாக அவர்கள் தங்கள் கணவருக்கு எல்லா விஷயங்களிலும் ஆதரவளிப்பார்கள். பண விஷயத்தில் கணவருக்கு ஆதரவளிப்பார்கள். தங்கள் கணவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அளவற்ற அன்பைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்கள் கணவர் குடும்பத்தை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள். மாமியார் மாமனாரையும் சொந்த பெற்றோரைப் போலக் கவனித்துக் கொள்வார்கள். இவர்கள் மிகவும் அன்பாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் கணவர், அவர்களது கணவர் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தங்கள் பங்களிப்பைச் செய்வார்கள்.