நாகர்ஜூனாவை டம்மியாக்கி சௌபின் ஷாகீருக்கு சம்பவ சீன் கொடுத்த லோகேஷ் கனகராஜ்: என்ன காரணம்?
Coolie : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வில்லனுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கூலி விமர்சனம்
மாஸ்டர், லியோ மற்றும் விக்ரம் படங்களின் வரிசையில் இப்போது இணைந்திருக்கும் படம் தான் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் காம்பினேஷனில் முதல் முறையாக உருவான இந்தப் படம் இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் நாகர்ஜூனா, உபேந்திரா, அமீர் கான், பூஜா ஹெக்டே, சத்யராஜ், சௌபின் ஷாகீர் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
கூலி திரை விமர்சனம்
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிலையில் தான் இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. படத்தின் கதை நன்றாக இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கும், காட்சிப்படுத்தலுக்கும் கூடுதல் முயற்சி எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
நாகர்ஜூனா, கூலி விமர்சனம்
துறைமுக மாஃபியா தலைவனாக வில்லனாக வரும் சைமனுக்கு (நாகர்ஜூனா) கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை விட அவருடன் தயாள் என்ற ரோலில் பணியாற்றி வரும் சௌபின் ஷாஹிருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுளது. சைமன் செய்யும் சட்டவிரோத வியாபாரத்தைத் தெரிந்துகொள்ள காவல்துறை ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடித்து கொலை செய்வது தயாளின் வேலையாக உள்ளது. என்னதான் நாகர்ஜூனா வில்லனாக இருந்தாலும், அதற்கான கூடுதல் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.
சௌபின் ஷாகிர்
மேலும், மோனிகா என்ற ஒரே பாடலில் சௌபின் ஷாஹிர் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். காலங்காலமாக தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு இருக்கும் டெக்னிக்கை பின்பற்றாமல் சற்று வித்தியாசமாக முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளார். இதற்கு முன்னதாக வந்த லியோ படமாக இருந்தாலும் சரி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களாக இருந்தாலும் சரி அந்தந்த படங்களில் வில்லன்களுக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்த லோகேஷ் இந்தப் படத்தில் நாகர்ஜூனாவை சற்று டம்மியாக்கிவிட்டார். படத்தின் படி ரஜினிகாந்த், சௌபின் ஷாகீர் தன் டாக் ஆஃப் தி டாபிக். மற்றபடி அமீர் கான், உபேந்திரா ஆகியோர் அவர்களது ரோலை சரியாக செய்து ரசிகர்களிடையே பாராட்டு பெற்றுள்ளனர்.