MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sofa Cleaning Tips : இனி சோபா சுத்தம் பண்ண கஷ்டபட வேண்டாம்; இந்த ஒரு பொருள் வைத்து சுலபமா சுத்தம் பண்ணலாம்

Sofa Cleaning Tips : இனி சோபா சுத்தம் பண்ண கஷ்டபட வேண்டாம்; இந்த ஒரு பொருள் வைத்து சுலபமா சுத்தம் பண்ணலாம்

அழுக்காக இருக்கும் சோபாவை புத்தம் புதுசாக மாற்றுவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Aug 14 2025, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : meta ai

தற்போது சோபா அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துகின்றன. வேலை முடித்து அலுப்பாக வீட்டிற்கு வந்தவுடன் சோபாவில் சிறிது நேரம் படுப்பது அவ்வளவு சுகமாக இருக்கும். இது தவிர படம் பார்ப்பது, சாப்பிடுவது, விருந்தாளிகள் வந்தால் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுவது, குழந்தைகளுடன் விளையாடுவது என அனைத்து விஷயங்களையும் சோபாவில் தான் நாம் செய்வோம். இன்னும் சொல்லப் போனால் சோபா தான் பலருக்கும் பிடித்த இடமாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Image Credit : meta ai

சோபா அழுக்காகாமல் இருக்க பலர் அதை கண்ணு கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். ஆனாலும் காலப்போக்கில் அதில் அழுக்குகள் சேர்ந்து விடும். சிலர் அழுக்கான சோபாவை பயன்படுத்துவதை விரும்பாமல் புதிய சோபாவை வாங்குவார்கள். ஏனெனில் அழுக்கான சோபாவை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

37
Image Credit : meta ai

பலரது வீடுகளில் சோபாவை சுத்தம் செய்வதற்கு வேக்கம் கிளீனர் தான் பயன்படுத்துவார்கள் இது சோபாவில் இருக்கும் தூசிகளை சுலபமாக சுத்தம் செய்து விடுமே தவிர, கறைகள் அல்ல. ஆனால் வேக்கம் கிளீனர் இல்லாமல் சோபாவில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறைகளை பத்தே நிமிடத்தில் சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

47
Image Credit : meta ai

இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துணி துவைக்கும் லிக்விட் மற்றும் சிறிதளவு வினிகர் சேர்த்து ஒன்றாக கலந்து ஒரு துணியை கொண்டு அதில் நனைத்து சோபாவில் படிந்திருக்கும் கறையில் மீது நன்கு தேய்த்த பிறகு இப்போது பாருங்கள் கறை நீங்கியிருக்கும்.

57
Image Credit : meta ai

அதுவே சோபாவில் விடாப்பிடியான கறை இருந்தால் சூடான நீரில் பேக்கிங் சோடாவை கலந்து கெட்டியான பேஸ்ட் போல் குளித்து அதை கறை மீது தடவி பிறகு ஈரமான துணியைக் கொண்டு துடைத்து பாருங்கள். கறை முற்றிலும் நீங்கிவிடும்.

67
Image Credit : meta ai

துணியலான சோபாவை சுத்தம் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் துணி துவைக்கும் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு துணியை அதில் நனைத்து சோபாவை துடைக்க வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரில் மற்றொரு துணியை பயன்படுத்தி சோபாவை துடைத்தால் போதும். இப்போது சோபா பளிச்சுன்னு இருக்கும்.

77
Image Credit : meta ai

லெதர் சோபாவை சுத்தம் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து ஒரு துணி கொண்டு சோபாவை துடைத்தால் போதும் சோபா சுத்தமாகும்.

குறிப்பு : மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சோபாவை சுத்தம் செய்தால் கறைகள் படியாது. சோபாவும் புதுசு போல இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
சுத்தம் குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Dosa Tawa Cleaning Tips : தோசைக் கல் ஓரமா பிசுபிசுப்பு? ஒரு நிமிடத்தில் கிளீன் பண்ண சூப்பர் ட்ரிக்
Recommended image2
Mixie Jar Cleaning Tips : மிக்ஸி கப்பை இப்படியும் சுத்தம் பண்ணலாமா? அழுக்கு சுலபமாக நீங்க டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved