உங்க மிக்ஸி ஜாருக்கு பின்னாடி இருக்கும் விடாப்பிடியான கறையை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
சமயலறை முதல் கிச்சனுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பொருட்கள் வரை என அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் நமக்கே தெரியாமல் நாம் சில வற்றை சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம். அப்படி ஒன்றுதான் மிக்ஸி ஜார். ஆமாங்க, தினமும் நாம் பயன்படுத்தும் மிக்ஸி ஜாரை அதன் உள்ளே மட்டும் தான் கழுவுவோம். ஆனால் அதன் பின்னாடி கழுவுவதே இல்லை. இதனால் அதோட பின்னாடி அழுக்கு சேர்ந்து விடாப்பிடியான கறையாகிவிடுகிறது. அதை எவ்வளவு தேய்த்தாலும் போகவே போகாது. எப்படி மாத வருட கணக்கில் இருக்கும் விடாப்பிடியான அழுக்கை சுலபமாக சுத்தம் பண்ணுவது எப்படி என்று இப்போது இந்த பதிவில் காணலாம்.
மிக்ஸி ஜார் பின் பக்கத்தை சுத்தம் செய்வது எப்படி?
மிக்ஸி ஜார் பின் பக்கத்தை சுத்தம் செய்வதற்கு வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களை வைத்து எளிமையான பவர்ஃபுல் தீர்வு இதோ..
தேவையான பொருட்கள் :
பேக்கிங் சோடா - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
பாத்திரம் கழுவும் லிக்விட் - 1 ஸ்பூன்
தண்ணீர் - அரை லிட்டர்
தயாரிக்கும் முறை :
இதற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் பாத்திரம் கழுவும் லிக்விடையும் ஊற்றுங்கள். அவ்வளவுதான் இப்போது சூப்பரான ஒரு லிக்விட் தயார்.
பயன்படுத்தும் முறை :
இப்போது அழுக்கு குவிந்து இருக்கும் மிக்ஸி ஜாரை பின்பக்கமாக கவனித்து அதில் தயாரித்து வைத்த லிக்விடை ஊற்றி சுமார் 2 முதல் 3 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். அப்போதுதான் அது நன்கு ஊறும். அதன் பிறகு ஒரு பழைய டூத் பிரஷ் கொண்டு கறைகள் உள்ள இடங்களை நன்றாக தேய்க்க வேண்டும். அதன்பிறகு தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். இப்போது நீங்கள் பார்த்தால் ஜார் பின்புறம் கறை அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும் உங்களுக்கு தேவைப்பட்டால் பேக்கிங் சோடா கூட மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
மிக்ஸி ஜாரின் உள்பக்கம்
மிக்ஸி ஜாரின் உள்பக்கம், அதுவும் குறிப்பாக பிளேடுகளுக்கு இடையே மஞ்சள் கறை இருக்கும். அதை சுத்தம் செய்வதற்கு தயாரிக்க லிக்விடை ஊற்றி அரை மணி நேரம் நன்கு ஊற வைத்து பிறகு ஸ்க்ரப்பர் கொண்டு தேய்த்து கழுவினால் போதும்.
உங்களது மிக்ஸி ஜாரை இப்படி சுத்தம் செய்தாலே போதும் எவ்வளவு விடாப்படியான கறையையும் சுலபமாக நீக்கிவிடும். மேல இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை கூட செய்து வந்தால் மிக்ஸி ஜார் எப்போதுமே புதுசு போல பளபளக்கும்.
