- Home
- Cinema
- தொலைக்காட்சி
- புள்ள வேணும், கார்த்திக்கை கரெக்ட் பண்ண முயற்சிக்கும் ரேவதி; கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
புள்ள வேணும், கார்த்திக்கை கரெக்ட் பண்ண முயற்சிக்கும் ரேவதி; கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
Revathi Wants two childs in Karthigai Deepam 2 Serial Update : தனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் வேண்டும் என்று கார்த்திக்கை ரேவதி வெறுப்பேற்றும் நிலையில் கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் 2 ரேவதி தீமிதிக்கும் காட்சி
Revathi Wants two childs in Karthigai Deepam 2 Serial Update : கார்த்திகை தீபம் 2 சிரீயலில் த்ரில்லர் ஒரு பக்கம் இருந்தாலும் ரொமாண்டிக் காட்சிகளும் மாறி மாறி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேற்றைய் எபிசோடில் தீக்குழி இறங்கும் போது ரேவதிக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. அவரால் நடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அப்போது எதற்காக தீக்குழு இறங்குன என்று கேட்கும் போது அதற்கு தனக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் வேண்டும். அதற்காகத்தான் நான் பூக்குழி இறங்கினேன் என்று சொல்லி கார்த்திக்கை வெறுப்பேற்றினார்.
கார்த்திகை தீபம் 2 டுடே எபிசோடு
இதில், வெறுப்பேற்ற என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம், என்னதான் ரேவதி தனது காதலை வெளிப்படுத்தியிருந்தாலும் கார்த்திக் அதில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறிவிட்டார். ரேவதியை பிடிக்கும் தான். ஆனால், காதலிக்கவில்லை என்றும், தனது மனதில் ரேவதிக்கு இடமில்லை என்றும் அவர் கூறிவிட்டார். இப்போது ரேவதி கூறியதற்கும், இதற்கு முன்னதாக கோயில் கும்பாபிஷேக விழாவின் போது அவருக்கு குறி பார்த்தவர் இரட்டை குழந்தை பிறக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த இரண்டையும் வைத்து பார்க்கும் போது ரேவதிக்கு இரட்டை குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக்கும் மனசு மாறி ரேவதியை தனது மனைவியாக ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கிறது.
ரேவதியை தூங்கிச் செல்லும் கார்த்திக்
ரேவதி நடக்க முடியாமல் தவித்த போது அவரை கார்த்திக் தூக்கிச் சென்றார். மேலும் காலில் உண்டான காயத்திற்கும் மருந்து போட்டுவிட்டார். அப்போது ரேவதி மைண்ட் வாய்ஸ்சாக உன்னை என்னுடைய காலை பிடிக்க வைக்க இவ்வளவு பண்ணவைக்க வேண்டிருக்கு. இந்த நிலையில் உன்னை என்னை பிடிக்க வைக்க இன்னும் என்னென்ன பண்ணனுமோ தெரியல என்று மனதிற்குள்ளும் நினைத்துக் கொள்ளும் காட்சியும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கார்த்திகை தீபம் 2
ஒரு கட்டத்தில் ரேவதி நடிப்பை புரிந்து கொண்ட கார்த்திக் பல்லி இருப்பதாக சொல்ல ரேவதி பயந்து ஓடுகிறார். பிறகு அவரிடம் எதுக்கு இப்படியெல்லாம் பண்ணனும் என்று கேட்க இந்த வலியை கூட தாங்கலைனா எப்படி பிரசவ வலியை தாங்குறது என்று சொல்ல கார்த்திக் ஒழுங்கா போய் தூங்கு என்று சொல்ல ரேவதி பாட்டு பாடி வெறுப்பேற்றியபடி இருக்கிறார்.
கார்த்திகை தீபம் 2 சீரியல்
அடுத்து சாமுண்டீஸ்வரியும் சந்திரகலாவும் வீட்டிற்கு கிளம்ப சந்திரகலா எல்லாரும் பரமேஷ்வரி வீட்டில் தான் இருக்காங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி கடுப்பாகி பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு கிளம்புகிறார். இந்த சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திக்கை தீபம் 2 சீரியலின் இன்றைய அப்டேட்.