இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வானிலை நிலவரம், முதல்வர் ஸ்டாலின், தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:29 PM (IST) Nov 08
திமுக 75 அறிவுத்திருவிழா நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒருநாள் ராஜேந்திர சோழனாக மாறுவார் என பேசியது தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சியை ஏற்படுத்தியது.
11:14 PM (IST) Nov 08
மூத்த பாஜக தலைவர் LK அத்வானிக்கு, பிரதமர் மோடி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பாரத ரத்னா அத்வானியை நாட்டின் அரசியலில் பெரும் பங்களிப்பை வழங்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என்று பாராட்டினார்.
11:04 PM (IST) Nov 08
மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கலங்கிய கண்களோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கிரிசில்டா, அந்த வீடியோவில், என் குழந்தையின் சாபம் உன்னை சும்மா விடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
10:35 PM (IST) Nov 08
WhatsApp சர்வர் சுமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, WhatsApp மூன்றாம் தரப்பு AI சேவைகளான ChatGPT-ஐ ஜனவரி 15, 2026 முதல் தடை செய்கிறது. 50 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பாதிக்கப்படுவர். உங்கள் அரட்டை வரலாற்றை சேமிப்பது எப்படி என அறியுங்கள்!
10:34 PM (IST) Nov 08
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாகக் கருதப்பட்ட ரௌடி நாகேந்திரன் உயிரிழக்கவில்லை, அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்பவைத்துள்ளதாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10:30 PM (IST) Nov 08
Laptop Plugged லேப்டாப்பை எப்போதும் சார்ஜில் வைத்திருப்பது பேட்டரிக்குக் கெடுதலா? நிபுணர்கள் கூறுகையில், நவீன லேப்டாப்கள் பேட்டரி ஆயுளைப் பாதுகாக்கின்றன. சிறந்த சார்ஜிங் பழக்கவழக்கங்கள் இங்கே!
10:20 PM (IST) Nov 08
Google Gemini கூகுள் ஜெமினியின் Deep Research அம்சம் இப்போது Gmail, Drive, Docs மற்றும் Chat-ஐப் படித்து விரிவான அறிக்கைகளை உருவாக்கும். இந்த சக்திவாய்ந்த AI அப்டேட் டெஸ்க்டாப்பில் லைவ் ஆனது. அம்சங்களைப் பற்றி அறிக!
10:12 PM (IST) Nov 08
OpenAI ChatGPT காரணமாக தற்கொலை மற்றும் தீவிர மன உளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி OpenAI மீது அமெரிக்காவில் 4 தவறான மரண வழக்குகள் உட்பட 7 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துகிறது.
10:05 PM (IST) Nov 08
SorryNotSorry ஜியோ, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் #SorryNotSorry ட்ரெண்டில் போலியான 'மன்னிக்கவும்' செய்திகளைப் பதிவிடுகின்றன. இது புதிய சலுகைகளை விளம்பரப்படுத்தப் பயன்படுத்தப்படும் வேடிக்கையான மார்க்கெட்டிங் தந்திரம்.
09:56 PM (IST) Nov 08
Pondicherry University PhD Admissions NAAC-ஆல் "A+" தர அங்கீகாரம் பெற்ற பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Ph.D. சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி, கட்டணம் மற்றும் டிசம்பர் 30-க்கு முன் விண்ணப்பிப்பது பற்றி அறிக.
09:49 PM (IST) Nov 08
நினைவுகளைச் சுமந்திருக்கும் எண்ணூர் மக்கள் பாதிக்கப்படாமலிருக்க புதிதாக வரவிருக்கும் அனல் மின் நிலையங்கள் உற்பத்தி தொடங்குவதற்கு முன்பு சாம்பல் கிணறை கட்டமைப்பதன் கருதி கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
09:45 PM (IST) Nov 08
BEML Recruitment 2025 பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML)-ல் 100 Junior Executive பணியிடங்கள் அறிவிப்பு. தகுதி: B.E/B.Tech (60%). ஆரம்பச் சம்பளம் ரூ.35,000. நவம்பர் 12, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
09:36 PM (IST) Nov 08
Temple Recruitment கோவை பட்டீசுவரசுவாமி கோயிலில் மருத்துவ மையத்திற்கான 5 பணியிடங்கள் (மருத்துவர், செவிலியர், உதவியாளர்) அறிவிப்பு. தேர்வு இல்லை, நேர்காணல் மட்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 2, 2025.
09:28 PM (IST) Nov 08
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
08:34 PM (IST) Nov 08
பாரம்பரிய மீனவர்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சிறு வணிகர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் மத்திய அரசு இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை விரிவுபடுத்த சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.
07:38 PM (IST) Nov 08
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பேசியே தீரவேண்டும் என்றால் ரூம் போட்டுக்கூட பேசலாம் என்று கூறி நடிகை கஸ்தூரி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
07:06 PM (IST) Nov 08
Curd on Face and Hair : முகம் மற்றும் கூந்தல் பிரச்சினைக்கு தயிரை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
06:44 PM (IST) Nov 08
திமுகவில் ஏழு பேர் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்கள். இனி 9 பேர் வரை அந்த துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கலாம் என்று கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
06:32 PM (IST) Nov 08
குறைந்த பந்துகளில் 1000 T20I ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். 528 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், சூர்யகுமார் யாதவின் (573 பந்துகள்) சாதனையை முறியடித்தார்.
06:26 PM (IST) Nov 08
நீங்கள் எப்போதுமே சோர்வாக இருக்கிறீர்கள் என்றால் , உங்களை சுறுசுறுப்பாக மாற்ற உதவும் சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
06:09 PM (IST) Nov 08
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான தளபதி கச்சேரி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
05:20 PM (IST) Nov 08
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் டி20 தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி உள்ளது.
04:42 PM (IST) Nov 08
டீ அல்லது காபி குடித்துப் பழகியவர்களுக்கு அதை குடிக்காமல் இருந்தால் தலைவலி வரும் என்று சொல்லுவார்கள். அதற்கான காரணம் என்னவென்று இங்கு பார்க்கலாம்.
04:36 PM (IST) Nov 08
திமுக 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முல்வர் ஸ்டாலின் ஒரு சூரியன்.. ஒரு சந்திரன்.. ஒரு தி.மு.க.தான்.. இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது என்று பேசினார்.
03:52 PM (IST) Nov 08
சைக்கிள் கடை, டீக்கடை என்று ஒரு இடம் விடாமல் திராவிடக் கழக இதழ்களை ஒரு திமுககாரர் வசிக்க, அவரை சுற்றி 10 பேர் செவி வழியாக கேட்டு உலகத்தவர்களை தெரிந்து கொண்டார்கள். இப்படி நாம் பெற்ற வெற்றி யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனை’’ என தெரிவித்தார்.
03:41 PM (IST) Nov 08
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹிட்டான படங்களைவிட பிளாப் ஆன படங்கள் தான் அதிகம். அந்த வரிசையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி பிளாப் ஆன டாப் 10 படங்கள் பற்றி பார்க்கலாம்.
03:36 PM (IST) Nov 08
குழந்தைகளின் அறிவுக் கூர்மையை வளர்க்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் 5 டிப்ஸ்களை இங்கு காணலாம்.
03:29 PM (IST) Nov 08
02:47 PM (IST) Nov 08
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 படத்துக்காக பட்ஜெட்டை வாரி வழங்கி இருக்கிறாராம் கமல்ஹாசன். அதுமட்டுமின்றி சுந்தர் சி-யின் சம்பள விவரமும் வெளியாகி இருக்கிறது.
02:40 PM (IST) Nov 08
கிருஷ்ணகிரியில் 5 மாத குழந்தை மூச்சுத்திணறி இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தந்தையின் புகாரால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. விசாரணையில், ஓரின சேர்க்கை உறவுக்கு தடையாக இருந்ததால், தாயும் அவரது தோழியும் சேர்ந்து குழந்தையை கொலை செய்தது அம்பலமானது.
02:39 PM (IST) Nov 08
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழை பெய்யாமலேயே திடீரென நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
02:34 PM (IST) Nov 08
இறந்த மாணவியின் குடும்பத்தினர் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுவது இது முதல் முறை அல்ல. கிட்டத்தட்ட ஒரு வருடமாக கொடுமைப்படுத்தப்படுவதாக புகாரளித்து வந்ததாகவும், ஆனால் அவரது புகார்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
02:02 PM (IST) Nov 08
தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி நீர் குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்க்கலாம்.
01:54 PM (IST) Nov 08
சீமான் அவர்கள் வந்து ஒரு நாளைக்கு 20 முறை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதனால் சீமான் பேசுவது எல்லாத்தையும் ஒளிபரப்பு பண்ணிட்டீங்களா? அவர் சொல்கிற பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைத்து விட்டார்களா?
01:43 PM (IST) Nov 08
நடிகை கெளரி கிஷானை பாடி ஷேமிங் செய்யும் வகையில் கேள்வி கேட்ட யூடியூபர் கார்த்திக், ஆரம்பத்தில் மன்னிப்பே கேட்க மாட்டேன் என கூறி வந்த நிலையில், தற்போது விஷயம் பெரிதானதால் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
01:34 PM (IST) Nov 08
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட உள்ளார்.
01:33 PM (IST) Nov 08
முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, ஓபிஎஸ் அணியில் உள்ள முக்கிய தலைவரான வைத்தியலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க திமுக, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-சசிகலா தரப்பு என மும்முனை போட்டி நிலவி வருகிறது.
12:49 PM (IST) Nov 08
நடிகை கெளரி கிஷனிடம் உருவ கேலி செய்யும் விதமாக கேள்வி கேட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என யூடியூபர் கார்த்திக் திட்டவட்டமாக கூறி இருக்கிறார், அதைப்பற்றி பார்க்கலாம்.
12:40 PM (IST) Nov 08
சீதாவின் ஆசீர்வாதத்துடன், இந்த முடிவு ராம் லல்லாவுக்கு ஆதரவாக உள்ளது. நான் அன்னை சீதாவின் இந்த புனித பூமிக்கு வந்திருக்கிறேன். இது ஒரு பெரிய பாக்கியம். இந்த நாள் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு நினைவிருக்கிறது.
12:27 PM (IST) Nov 08
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் ஆட்டோக்களை, ஆண்கள் ஓட்டுவதாக புகார்கள் எழுந்தன. பலமுறை எச்சரித்தும் விதிமீறல் தொடர்வதால், இனி பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் அவை பறிமுதல் செய்யப்படும்.