- Home
- Politics
- தைரியம் இருந்தால் ஸ்டாலினிடம் கேட்டுவிட்டு விஜய் பக்கம் வா..! தோரணம் கட்டி துவைத்தெடுத்த தவெக நிர்வாகி..!
தைரியம் இருந்தால் ஸ்டாலினிடம் கேட்டுவிட்டு விஜய் பக்கம் வா..! தோரணம் கட்டி துவைத்தெடுத்த தவெக நிர்வாகி..!
சீமான் அவர்கள் வந்து ஒரு நாளைக்கு 20 முறை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதனால் சீமான் பேசுவது எல்லாத்தையும் ஒளிபரப்பு பண்ணிட்டீங்களா? அவர் சொல்கிற பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைத்து விட்டார்களா?

தவெக தலைவர் விஜய் ஏன் செய்தியாளர்களை சந்தித்துப்பேசுவதில்லை என எதிர் கட்சிகள், விமர்சகர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறனர். இந்நிலையில் விஜய் ஏன் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் எனக் கேட்டு எப்போது சந்திப்பார் என அதற்கான பதிலையும் அளித்துள்ளார் தவெக நிர்வாகி ஒருவர்.
செய்தியாளர்களை விஜய் ஏன் சந்திக்க மறுக்கிறார்? என தவெக நிர்வாகியிடம் கேட்டதற்கு, ‘‘விஜய் செய்தியாளர்களை ஏன் சந்திக்க வேண்டும்? நீங்கள் விஜயிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் கேட்கவேண்டியது தானே. ஆளும் கட்சியை பார்த்துக் கேட்க வேண்டியதுதானே. அவர்களிடம் கேட்பதற்கு எத்தனை கேள்விகள் இருக்கிறது. அனைத்துப் பெண்களுக்கும் ஏன் ஆயிரம் ரூபாய் கொடுப்படவில்லை. கல்விக் கடன் தள்ளுபடி செய்கிறோம் என்று நீங்க சொன்னீங்களே தள்ளுபடி செய்தீர்களா? பழைய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் நடைமுறை படுத்துவோம் என்று சொன்னார்கள... ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று யாராவது கேட்டீர்களா? 1500 நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐயா ஸ்டாலின் அவர்களே கரூருக்கு இரவோடு இரவாக நீங்க போறீங்க. பரந்தூரில் அந்த விவசாயிகளை ஏன் பார்க்க மாட்டேங்கறீங்கன்னு கேட்டீங்களா?
காவல்துறையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட அஜித்குமாருடைய வீட்டுக்கு அய்யா ஸ்டாலின் அவர்கள் சென்றார்களா? ஏன் போகவில்லை என நீங்கள் கேள்வி கேட்டீங்களா? ஆட்சியில் இருக்கின்ற ஆட்சியாளர்களை பார்த்து கேள்வி கேட்பதற்கு எந்தப்பத்திரிகைக்கும் துணிச்சல் இல்லை. எந்த ஊடகமும் ஆட்சியாளர்களை பற்றி கேள்வி கேட்க மறுக்கிறது. பொன்முடி எவ்வளவு கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். கே.என்.நேரு ரக வளர்ச்சிடததுறையில் ஒரு வேலைக்கு நபருக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் வாங்குறாரு 2500க்கு மேற்பட்டவரிடம் அவர் பணம் வாங்கி இருக்கறதா சொல்றாங்க. அண்டப்பணத்தை பெருக்கினால் எத்தனை கோடி வரும் என்பதே எங்களுக்கு தெரியாது.
அதையெல்லாம் எத்தனை ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருக்கிறது? திமுக உடைய செய்தி தொடர்பாளராக இருக்கக்கூடியவர்களிடம் நாங்கள் எதைச் சொல்ல வேண்டும் என நீங்கள் நினைக்கிறீங்க. அதாவது கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் போன்று நீங்க வந்து கேலி சித்திரம் செய்து, மீம்ஸ் செய்து அப்படியே தமிழக வெற்றி கழகத்தை வீழ்த்தி விடலாம் என நினைக்கிறீர்கள். அண்ணன் விஜய் அவர்களை வீழ்த்தி விடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். எங்களிடம் விர்ச்சுவல்வார்ஸ் ஒன்று இருக்கிறது. அதைத்தாண்டித்தான் தலைவர் விஜய் பக்கத்திலேயே வரணும். எந்த நேரத்தில் பத்திரிக்கையாளரை சந்திக்க வேண்டுமோ அந்த நேரத்தில் அவர் சந்திப்பார். ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தினமும் பத்த்ரிகையாளர்களை சந்திக்கிறார். இப்போது அவர் பேசுறதனால் தீர்வு கிடைத்து விட்டதா? அதை எல்லா மீடியாக்களும் ஒளிபரப்புகிறதா?
எல்லா செய்தி நிறுவனமும் அவர் பேசக்கூடிய செய்தியை ஒளிபரப்பு செய்கிறதா? சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசினால் லைவ் கட் ஆகிறது. முதலமைச்சர் பேசினா பத்து நிமிஷம் லைவ் மட்டும் வருது. திமுக அதிமுக வீழ்த்தப்பட வேண்டும். திமுக வீழ்த்தப்பட வேண்டும், பிஜேபி வீழ்த்தப்படவேண்டும் எங்களுக்கு எல்லா கட்சியும் ஒண்ணுதான். இவங்க தான் அதிகாரத்திலிருந்து மக்களுக்கு விரோதமா செயல்பட்டவர்கள். எந்த இடத்தில் நாங்கள் அதிமுகவுக்கு மட்டும் முட்டுக் கொடுக்க மாட்டோம். பாஜகவுக்கு முட்டுக் கொடுக்க மாட்டோம். எவனுமே வேணாம்னு தான் நாங்க வந்து நல்லாட்சி தருகிறோம் எனச் சொல்கிறோம். அந்த அடிப்படையில் தலைவர் தெளிவாக இருக்கிறார். எந்த நேரத்தில், எந்த இடத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டுமோ அந்த நேரத்துல சந்திப்பார்.
உங்களுடைய விருப்பத்திற்கெல்லாம் அவர் சந்திக்க மாட்டார். அவர் வந்து பேச வேண்டிய இடத்தில் பேசுவார். மதுரையில் மக்கள் கூட்டம் இருந்தபோது அவராக வந்து பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். தேவை இருக்கின்ற போதுதான் பத்திரிகையாளர் சந்திக்க முடியுமே தவிர, சும்மா சும்மா பத்திரிகையாளரை கூப்பிட்டு எல்லாம் பேசிட்டு இருக்க முடியாது.
சீமான் அவர்கள் வந்து ஒரு நாளைக்கு 20 முறை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதனால் சீமான் பேசுவது எல்லாத்தையும் ஒளிபரப்பு பண்ணிட்டீங்களா? அவர் சொல்கிற பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைத்து விட்டார்களா? எந்த நேரத்தில் எந்த இடத்தில் பத்திரிக்கையாளர் சந்திக்க வேண்டுமோ அந்த நேரத்துல சந்திப்பார். உங்களுடைய விருப்பத்திற்கெல்லாம் அவர் சந்திக்க மாட்டார். அவர் வந்து பேச வேண்டிய இடத்தில் பேசுவார்’’ என அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.