- Home
- Sports
- Sports Cricket
- Ind Vs Aus: போட்டியை திடீரென நிறுத்திய அம்பயர்.. தடைபட்ட கடைசி போட்டி.. என்ன காரணம்..?
Ind Vs Aus: போட்டியை திடீரென நிறுத்திய அம்பயர்.. தடைபட்ட கடைசி போட்டி.. என்ன காரணம்..?
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழை பெய்யாமலேயே திடீரென நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.
தொடரை கைப்பற்றும் இந்தியா..?
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. 5வது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலியா அணியும் களம் இறங்கின.
அதிரடி காட்டிய இந்தியா
வழக்கம் போல டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். இரு வீரர்களும் அடுத்தடுத்து அதிரடி காட்டிய நிலையில் இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்கள் விளாசினர். அபிஷேக் ஷர்மா 23 ரன்களும், சுப்மன் கில் 29 ரன்கள் எடுத்த நிலையில் நடுவர்கள் திடீரென போட்டியை நிறுத்தினர்.
திடீரென போட்டியை நிறுத்திய நடுவர்கள்
மழையே பெய்யவில்லை பின்னர் ஏன் நடுவர்கள் போட்டியை நிறுத்துகிறார்கள் என தெரியாமல் வீரர்களே ஒரு நிமிடம் ஆச்சரியமடைந்தனர். ஆனால் இடி, மின்னல் காரணமாக போட்டி நிறுத்தப்படுவதாக நடுவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே இதுபோன்ற போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் மின்னல் தாக்கி வீரர்கள் உயிரிழந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போட்டி நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.