- Home
- Sports
- Sports Cricket
- ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தமிழக வீரர் நீக்கம்..! SA டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
ஒரு போட்டியில் கூட விளையாடாமல் தமிழக வீரர் நீக்கம்..! SA டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
IND vs SA Test Series: தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படாமல் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஓடிஐ தொடரில் விளையாடி முடித்து விட்டு, இப்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் 22ம் தேதி குவஹாத்தியில் நடைபெற உள்ளது.
இந்திய அணி அறிவிப்பு
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காலில் காயம் அடைந்த அதிரடி வீரர் ரிஷப் பண்ட் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல் காயம் அடைந்த பாஸ்ட் பவுலர் ஆகாஷ் தீப்பும் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
நாராயண் ஜெகதீசனுக்கு பெரும் அநீதி
இதேபோல் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே வேளையில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடித்தும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படாத தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை.
பிசிசிஐக்கு கடும் கண்டனம்
ஒரு வீரரை அணியில் எடுத்து ஒரு போட்டியில் கூட விளையாட வைக்காமல் இப்போது பிசிசிஐ கழட்டி விட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாராயண் ஜெகதீசனுக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படாத நிலையில், சரியாக விளையாடாத தேவ்தத் படிக்கலுக்கு அணியில் இடம் அளித்துள்ளது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. பிசிசிஐ திறமையான தமிழக வீரர்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய அணி வீரர்கள் லிஸ்ட்
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ்.