- Home
- Sports
- Sports Cricket
- இந்திய அணியை நேரில் பாராட்டிய பிரதமர் மோடி..! வீராங்கனைகள் கொடுத்த சூப்பர் கிப்ட்!
இந்திய அணியை நேரில் பாராட்டிய பிரதமர் மோடி..! வீராங்கனைகள் கொடுத்த சூப்பர் கிப்ட்!
மகளிர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார். பிரதமர் தங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை சந்தித்த பிரதமர் மோடி
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை பந்தாடி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில், ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தனது லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் இன்று சந்தித்து விருந்தளித்தார். தொடர்ச்சியாக மூன்று தோல்விகளுக்குப் பிறகு போட்டியில் சிறப்பாக மீண்டு வந்ததற்கு பிரதமர் மோடி இந்திய அணியை பாராட்டினார்.
வீராங்கனைகள் கொடுத்த பரிசு
இந்திய வீராங்கனைகள்'நமோ 1' என அச்சிடப்பட்ட கையெழுத்திட்ட ஜெர்சியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர். அப்போது பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸும் உடனிருந்தார். இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 2017-ல் (லார்ட்ஸில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் நூலிழையில் தோல்வியடைந்த பிறகு) பிரதமரை சந்தித்ததை நினைவு கூர்ந்தார்.
அப்போது கோப்பை இல்லாமல் பிரதமரை சந்தித்ததாகவும், இப்போது கோப்பையுடன் அவரை சந்தித்துள்ளதால், அடிக்கடி அவரை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.
மோடியை சந்தித்தது உத்வேகம்
இந்திய அணி துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பிரதமர் தங்களை ஊக்கப்படுத்தியதாகவும், அனைவருக்கும் உத்வேகமாக இருந்ததாகவும் கூறினார். இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
'தொடர் நாயகி' விருது வென்ற தீப்தி ஷர்மா, பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருந்ததாகக் கூறினார். 2017-ல் நடந்த சந்திப்பையும், அப்போது கடினமாக உழைக்குமாறும், தங்கள் கனவை அடைய முடியும் என்றும் பிரதமர் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.
ஜெய் ஸ்ரீ ராம் என பச்சைக்குத்திய தீப்தி
தீப்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று எழுதியதையும், அவரது கையில் அனுமன் பச்சை குத்தியிருந்ததையும் பிரதமர் குறிப்பிட்டார். அது தனக்கு வலிமை அளிப்பதாக தீப்தி கூறினார். எப்போதும் நிகழ்காலத்தில் எப்படி இருக்க முடிகிறது என்று ஹர்மன்ப்ரீத் பிரதமர் மோடியிடம் கேட்டார். அதற்கு, அது தனது வாழ்வின் ஒரு பகுதியாகி, பழக்கமாகிவிட்டது என்று அவர் பதிலளித்தார்.
அமன்ஜோத் கவுர் பிடித்த கேட்ச்
2021-ல் இங்கிலாந்துக்கு எதிராக (இங்கிலாந்தில் நடந்த டி20 போட்டியில்) ஹர்லீன் தியோலின் பிரபலமான கேட்சையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். சதம் அடித்த லாரா வோல்வார்ட்டை ஆட்டமிழக்கச் செய்ய, பல தடுமாற்றங்களுக்குப் பிறகு அமன்ஜோத் கவுர் பிடித்த பிரபலமான கேட்ச் பற்றி பிரதமர் விவாதித்தார்.
இது தான் பார்க்க விரும்பும் ஒரு தடுமாற்றம் என்று அமன்ஜோத் கூறினார். கேட்ச் பிடிக்கும்போது பந்தைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் கேட்ச்சுக்குப் பிறகு கோப்பையைப் பார்த்திருப்பீர்கள் என்று பிரதமர் கூறினார்.
மோடியின் தீவிர ரசிகர்
கிராந்தி கவுட், தனது சகோதரர் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் என்று குறிப்பிட்டார். உடனடியாக அவர்களை சந்திக்க பிரதமர் அழைப்பு விடுத்தார். 'ஃபிட் இந்தியா' செய்தியை, குறிப்பாக நாடு முழுவதும் உள்ள சிறுமிகளிடம் கொண்டு செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். உடல் பருமன் அதிகரித்து வரும் பிரச்சனை குறித்து விவாதித்து, ஆரோக்கியமாக இருப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார்.