- Home
- Tamil Nadu News
- பண்ணியே தீரணும்னா ரூம் போட்டு** கோவை மாணவியை கொச்சைப்படுத்தி கஸ்தூரி சர்ச்சை பேச்சு
பண்ணியே தீரணும்னா ரூம் போட்டு** கோவை மாணவியை கொச்சைப்படுத்தி கஸ்தூரி சர்ச்சை பேச்சு
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பேசியே தீரவேண்டும் என்றால் ரூம் போட்டுக்கூட பேசலாம் என்று கூறி நடிகை கஸ்தூரி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பாலியல் குற்றத்திற்கு இளம் ஜோடியும் காரணம்
நடிகையும், பாஜக பிரமுகருமான கஸ்தூரி இன்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கோவை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இளம் பெண்ணும், அவரது நண்பரும் ஒரு காரணம். இந்த வழக்கில் நான் காவல் துறையை குறைசொல்ல மாட்டேன். எனக்கு டீனேஜ் வயதில் ஒரு மகனும், மகளும் உள்ளனர். அதனால் தான் நான் குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் என நினைக்கின்றேன்.
ரூம் போட்டு பேசலாம்
காதல், கண்றாவி, வியாபாரம் என எந்த காரணமாக இருந்தாலும் நேரம் கெட்ட நேரத்தில் தேவையில்லாத இடத்திற்கு செல்லக் கூடாது. உங்களால் தவிர்க்கவே முடியவில்லை. பண்ணியே தீரணும்.. அதாவது பேச்சுவார்த்தை நடத்தியே தீரவேண்டும் என்றால் ரூம் போட்டுக்கூட பேசிக் கொள்ளலாம்.
நம் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு
நான் மகன், மகளின் தாயாக சொல்கிறேன். இங்கு சிங்ப்பூரைப் போன்ற பாதுகாப்பு கிடையாது. ஆண்களும் தேவையில்லாத நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது. நம் பாதுகாப்புக்கு நாம் தான் பொறுப்பு. நான் பேசிய கருத்துகள் பெண்ணியத்திற்கு எதிரானது என்றால் பெண்ணியமே தேவையில்லை. நன்கு படித்து பெரிய பொறுப்புகளுக்கு சென்று சாதனை செய்வதை சுதந்திரம் என்று சொல்லுங்கள் என்றார்.