இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், ஜிஎஸ்டி வரி விலக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:20 PM (IST) Sep 04
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துவது கட்டாயம், நேருவின் டெல்லி பங்களா ₹1,100 கோடிக்கு விற்பனை, இலங்கைத் தமிழர்களுக்கு சட்டச் சலுகை, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் உள்ளிட்ட பல முக்கிய செய்திகள் இன்றைய TOP 10 தொகுப்பில்…
10:29 PM (IST) Sep 04
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கிறார். டிரம்புடன் மோதல் போக்கில் உள்ள எலான் மஸ்க் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
10:17 PM (IST) Sep 04
நாட்டின் சாலைகளில் மஹிந்திரா கார்கள் ஆட்சி செய்கின்றன. நிறுவனத்தின் BE.06 காரும் அப்படித்தான். இந்த காரின் இசை மற்றும் லைட்டிங் அமைப்பைப் பார்த்தால் யாரும் அதை வாங்கிவிடுவார்கள். அதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
10:05 PM (IST) Sep 04
10:03 PM (IST) Sep 04
இன்னும் 4 மாத காலத்தில் இந்த ஆட்சி நிறைவு பெற்றுவிடும். அதன் பின்னர் தமிழகத்தில் பாமக ஆட்சி தான் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
09:47 PM (IST) Sep 04
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் டோக்கன் சிஸ்டம் மூலம் திமுக ஊழல் செய்கிறது, டாஸ்மாக், விலையில்லா வேட்டி, சேலை திட்டங்களிலும் ஊழல் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் தீபாவளிக்கு சேலை வழங்கப்படும் என்றார்.
09:45 PM (IST) Sep 04
கோவையில் திருமணமான பெண் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீதனம் கேட்டு தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவர், தற்போது மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
09:40 PM (IST) Sep 04
தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
09:16 PM (IST) Sep 04
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் அடுத்த தலைமுறைக்கானவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது மக்களுக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நன்மைகளை வழங்கும் எனவும் கூறியுள்ளார்.
08:44 PM (IST) Sep 04
TVS மோட்டார்ஸ் நிறுவனம் தனது சக்திவாய்ந்த Ntorq 150 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 150cc ஸ்கூட்டர் பிரிவில் இந்த புதிய அறிமுகம் மூலம் TVS போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டியின் முழு விவரங்களும் இங்கே.
07:58 PM (IST) Sep 04
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200ஐத் தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியா உட்பட பல நாடுகள் உதவியுள்ளன.
07:48 PM (IST) Sep 04
பண்டிகை கால ஷாப்பிங்கிற்கு முன்பு ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போது 5% மற்றும் 18% என இரண்டு ஸ்லாப்கள் மட்டுமே இருக்கும். இந்த மாற்றம் செப்டம்பர் 22, அதாவது நவராத்திரி தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வரும்.
07:30 PM (IST) Sep 04
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்பீல்ட் புல்லட்டுக்கு அதிக மவுசு உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே இந்த பைக் மிகவும் பிரபலம். இதன் தோற்றமும் சிறப்பான செயல்திறனும் மக்களை கவர்ந்திழுக்கிறது. மேலும், இதில் அட்டகாசமான அம்சங்களும் உள்ளன.
07:30 PM (IST) Sep 04
06:52 PM (IST) Sep 04
குழந்தையின் எடையை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
06:44 PM (IST) Sep 04
மத்திய அரசின் ஜிஎஸ்டி மீதான திருத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை வழங்கி உள்ளார்.
06:36 PM (IST) Sep 04
பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் ஒன்றாக வாங்கிச் சேமித்து வைப்போம். ஆனால் சரியான முறையில் கழுவி சுத்தம் செய்யாவிட்டால் அவை விரைவில் கெட்டுப்போகும்.
06:35 PM (IST) Sep 04
உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியாக டிரம்ப் நிர்வாகம் விதித்த வர்த்தக வரிகளை சட்டவிரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து டிரம்ப் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
06:33 PM (IST) Sep 04
வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது வீட்டைத் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். தரையைத் துடைக்கும்போது செய்ய கூடாத 4 தவறுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
06:24 PM (IST) Sep 04
இந்தியாவில் அதிக சம்பளம் மற்றும் பாதுகாப்பு தரும் டாப் 5 அரசுப் பணிகள். IAS, IPS, RBI, ISRO, மற்றும் IFS போன்ற பணிகளின் முழு விவரங்கள்.
06:22 PM (IST) Sep 04
வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல. முடி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. முடி வளர்ச்சிக்கு உதவும் சில வாழைப்பழ ஹேர் பேக் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
06:12 PM (IST) Sep 04
NIRF ரேங்கிங் 2025: டாப் 10 கல்லூரிகள் லிஸ்ட்.. தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்ன?
06:05 PM (IST) Sep 04
அமைச்சர் துரை முருகனின் மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜரான நிலையில் அவருக்கு எதிரான் பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
06:03 PM (IST) Sep 04
சந்திர கிரகணமோ அல்லது சூரிய கிரகணமோ, சில மரபுகளும் நடைமுறைகளும் நம்மிடையே உள்ளன. இது ஒரு வானியல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதைச் சுற்றி நிறைய நம்பிக்கைகளும் உள்ளன. சந்திர கிரகண நாளில் என்ன சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்வோம்.
06:01 PM (IST) Sep 04
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (செப்டம்பர் 4) முதல் தொடங்குகிறது. குரூப் ஸ்டேஜ் டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை ₹5,280 முதல் உள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் புதிய வடிவமைப்பில் இந்த உலகக் கோப்பை நடைபெறும்.
05:57 PM (IST) Sep 04
NIRF 2025 மருத்துவக் கல்லூரிகள் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி AIIMS முதலிடத்தைப் பிடித்தது, மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரி முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறியது. முழுப் பட்டியலையும் முக்கிய மாற்றங்களையும் அறிக.
05:55 PM (IST) Sep 04
ஒரே நாளில் முகத்தை பளிச்சுனு மாற்ற தயிரை பயன்படுத்தி போடப்படும் சில ஃபேஸ் மாஸ்க் பற்றி இங்கு பார்க்கலாம்.
05:46 PM (IST) Sep 04
நம்மில் பலர் நிதி சிக்கல்களால் அவதிப்படுகிறோம். அவற்றைச் சமாளிக்க தினமும் போராடுகிறோம். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது. அதிர்ஷ்டம் அவர்களுடன் இருக்கும். அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.
05:45 PM (IST) Sep 04
NIRF 2025 மேனேஜ்மென்ட் கல்லூரிகள் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. முதல் 10 இடங்களைப் பிடித்த நிறுவனங்கள், எம்டிஐ குர்கான் நுழைந்தது, ஐஐடி பாம்பே வெளியேறியது போன்ற முக்கிய மாற்றங்களை அறிக..
05:24 PM (IST) Sep 04
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற 13ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
05:23 PM (IST) Sep 04
ஜின்பிங், ‘‘இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று சிலர் மதிப்பிடுகின்றனர்’’ என்கிறார். அப்போது கிம் ஜாங் உன் சில அடிகள் விலகி நடந்து, அவரைப் பார்த்து சிரித்தார்.
05:17 PM (IST) Sep 04
OpenAI இன் ChatGPT Projects அம்சம் இனி இலவச பயனர்களுக்கும் கிடைக்கும். பணிகளை ஒழுங்கமைக்கவும், சூழலை சேமிக்கவும், புதிய கோப்பு பதிவேற்ற வரம்புகளுடன் பணிப்பாய்வை மேம்படுத்தவும் இந்த அம்சம் எவ்வாறு உதவுகிறது என்பதை அறிக.
05:13 PM (IST) Sep 04
ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக கருதப்படும் சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:09 PM (IST) Sep 04
05:07 PM (IST) Sep 04
05:02 PM (IST) Sep 04
புதிய ஜிஎஸ்டி விதிகளின்படி, பென்சில், நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பல பள்ளிப் பொருட்களுக்கு இனி வரி இல்லை. இதனால் பெற்றோர்கள் பட்ஜெட்டில் கணிசமாக பணத்தைச் சேமிக்கலாம்.
04:51 PM (IST) Sep 04
ஜிஎஸ்டி 2.0 புதிய சீர்திருத்தங்களால் ஐபிஎல் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பது குறித்து பார்க்கலாம்.
04:46 PM (IST) Sep 04
புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகின்றன. ஜிஎஸ்டி குறைப்பால் மொபைல் போன்கள் விலை குறையுமா, வேறு என்னென்ன பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
04:46 PM (IST) Sep 04
ரஷ்ய ஆதரவு பெற்ற சர்வாதிகாரி நரேந்திர மோடியின் பிடியில் இருந்து இந்திய மக்களை எப்படி விடுவிப்பது என்பது பற்றி 2 மணி நேரம் விவாதித்தேன். இன்றைய பிரிக்ஸ், இந்தியாவின் கொடூரங்கள், இனப்படுகொலை தன்மை பற்றி நானே நிறைய கற்றுக்கொண்டேன்
04:42 PM (IST) Sep 04
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் டெல்லியில் உள்ள பங்களா, ₹1,100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சொத்தின் புதிய உரிமையாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.