தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவில் 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பட்டியலில் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் அமைப்பாளர் என்ற முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று வழக்கறிஞர் பிரிவுக்கு குமரகுரு, தொழில்துறை வல்லுநர் பிரிவுக்கு சுந்தர் ராமன், மருத்துவ பிரிவுக்கு பிரேம்குமார், கலை மற்றும் கலாசார பிரிவுக்கு பெப்சி சிவக்குமார், ஆன்மீக மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவுக்கு பிரபல ஜோதிடர் ஷெல்வி அமைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மீனவர் பிரிவுக்கு சீமா, கல்வியாளர் பிரிவுக்கு நந்தகுமார், நெசவாளர் பிரிவுக்கு செல்வராஜ், அண்ணாதுரை, படை வீரர்கள் பிரிவு கர்னல் ராமன் என முக்கிய நிர்வாகிகள் அமைப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலைக்கு தற்போது வரை கட்சியில் பெரிய அளவில் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.
