- Home
- Sports
- கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்! 2026 FIFA உலகக் கோப்பை டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை!
கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்! 2026 FIFA உலகக் கோப்பை டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை!
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (செப்டம்பர் 4) முதல் தொடங்குகிறது. குரூப் ஸ்டேஜ் டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை ₹5,280 முதல் உள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் புதிய வடிவமைப்பில் இந்த உலகக் கோப்பை நடைபெறும்.

2025 FIFA உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (செப்டம்பர் 4) முதல் தொடங்குகிறது. குரூப் ஸ்டேஜ் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை ₹5,280 முதல் ஃபைனலுக்கான டிக்கெட்டுகளின் விலை ₹5,91,300 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவையைப் பொறுத்து இந்த விலைகளில் மாற்றம் இருக்கும் என ஃபிஃபா தெரிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை விவரங்கள் முதல் கட்ட விற்பனை: விசா அட்டை வைத்திருப்பவர்கள், ஃபிஃபா இணையதளத்தில் பதிவு செய்து, வரும் செப்டம்பர் 10 முதல் 19 வரை நடைபெறும் முன்கூட்டிய விற்பனைக்கான குலுக்கலில் பங்கேற்கலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அக்டோபர் 1 முதல் டிக்கெட்டுகளை வாங்க விண்ணப்பிக்கலாம்.
டிக்கெட் விற்பனை விதிமுறைகள்
ஒருவர் ஒரு போட்டிக்கு அதிகபட்சமாக நான்கு டிக்கெட்டுகள் வரையிலும், ஒட்டுமொத்த தொடருக்கு 40 டிக்கெட்டுகள் வரையிலும் வாங்க முடியும்.
இரண்டாம் கட்ட விற்பனைக்கான பதிவு அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும். நவம்பர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் தொடக்கம் வரை விற்பனை நடைபெறும். மூன்றாவது கட்டம், டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் தொடருக்கான டிராவுக்குப் பிறகு தொடங்கும்.
ஒரே அணியை ஆதரிக்கும் ரசிகர்களுக்கான சிறப்பு இருக்கைகள் மற்றும் நாக் அவுட் சுற்றுப் போட்டிகளுக்கான நிபந்தனைக்குட்பட்ட டிக்கெட்டுகள் போன்றவையும் வழங்கப்படும். ஃபிஃபா, டிக்கெட்டுகளை மறுவிற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ தளத்தையும் அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய வடிவமைப்பு மற்றும் அணிகள்
2026 ஃபிஃபா உலகக் கோப்பை, 48 அணிகள் பங்கேற்கும் மிகப்பெரிய போட்டியாக நடைபெற உள்ளது. போட்டி வடிவம் நான்காவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் 46 நாடுகள் நேரடியாகத் தகுதி பெறும், மீதமுள்ள இரண்டு இடங்கள் பிளேஆஃப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
தகுதி பெறும் நாடுகள்:
ஆசியா: 8 நாடுகள் (4 இடங்கள் அதிகம்)
ஆப்பிரிக்கா: 9 நாடுகள் (4 இடங்கள் அதிகம்)
வட மற்றும் மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன்: 6 நாடுகள் (3 இடங்கள் அதிகம்)
ஐரோப்பா: 16 நாடுகள் (3 இடங்கள் அதிகம்)
தென் அமெரிக்கா: 6 நாடுகள் (2 இடங்கள் அதிகம்)
ஓசியானியா: 1 நாடு (1 இடம் அதிகம்)
2026 கால்பந்து உலகக் கோப்பை போட்டி அட்டவணை
2026 ஃபிஃபா உலகக் கோப்பை, ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் 104 போட்டிகளுடன் நடைபெற உள்ளது.
12 குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகள் இடம்பெறும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளும், சிறந்த எட்டு மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
முக்கிய தேதிகள்:
குரூப் ஸ்டேஜ்: ஜூன் 11–27
ரவுண்ட் ஆஃப் 32: ஜூன் 28–ஜூலை 3
ரவுண்ட் ஆஃப் 16: ஜூலை 4–7
காலிறுதி: ஜூலை 6–11
அரையிறுதி: ஜூலை 14–15
மூன்றாம் இடத்துக்கான போட்டி: ஜூலை 18
இறுதிப் போட்டி: ஜூலை 19 (மெட்லைஃப் ஸ்டேடியம், நியூ ஜெர்சி.)
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

