ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் யார்? யார்? என்பது குறித்தும் சிஎஸ்கே அணி வீரர்கள் பட்டியல் குறித்தும் இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக சிஎஸ்கே அணி தேசிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாத (அன்கேப்டு வீரர்) 2 வீரர்களை எடுத்துள்ளது.

2 அன்கேப்டு வீரர்களை தூக்கிய சிஎஸ்கே

அதாவது இந்திய வீரரான தேசிய போட்டிகளில் விளையாடாத 19 வயதான பிரசாந்த் வீரை சிஎஸ்கே அணி ரூ.14.20 கோடிக்கு தட்டித்தூக்கியுள்ளது. இதேபோல் தேசிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரரான கார்த்திக் ஷர்மாவையும் சிஎஸ்கே அணி ரூ.14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைனை ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளது.

ராகுல் சாஹர், மேத்யூ ஷாட்

இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷாட்டை ரூ.1.5 கோடிக்கும், இந்திய ஸ்பின்னர் ராகுல் சாஹரை 5.2 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளது. நியூசிலாந்து பவுலர் மேட் ஹென்றியை ரூ.2 கோடிக்கும் சிஎஸ்கே வாங்கியுள்ளது. மேலும் அமான் கானை ரூ.40 லட்சத்துக்கும், இந்திய வீரர் சர்ப்ராஸ் கானை ரூ.75 லட்சத்துக்கும், நியூசிலாந்து வீரர் ஜாக் ஃபௌல்க்ஸை ரூ.75 லட்சத்துக்கும் சென்னை அணி வாங்கியுள்ளது.

Scroll to load tweet…

சிஎஸ்கே அணி வீரர்கள் முழு பட்டியல்:

ஐபிஎல் 2026 தொடருக்கான சிஎஸ்கே அணி வீரர்கள் பட்டியல்: ருத்ராஜ் கெய்க்வாட் (கேப்டன்), மகேந்திர சிங் தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத், ஜேமி ஓவர்டன், முகேஷ் சௌத்ரி, நாதன் எல்லிஸ், நூர் அகமது, ராமகிருஷ்ண கோஷ், ஷிவம் துபே, ஷ்ரேயாஸ் கோபால், கலீல் அகமது, ஆயுஷ் மத்ரே, டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், கார்த்திக் ஷர்மா, பிரசாந்த் வீர், ஷகீல் ஹொசைன், மேட் ஹென்றி, மேத்யூ ஷார்ட், சர்ப்பராஸ் கான், அமான் கான், ராகுல் சஹர் மற்றும் ஜாக் ஃபௌல்க்ஸ்.