- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்கள்..! லட்டு போல் தூக்கிய சிஎஸ்கே!
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்கள்..! லட்டு போல் தூக்கிய சிஎஸ்கே!
IPL 2026 Auction: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2 அன்கேப்டு இந்திய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கீரினை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோல் சிஎஸ்கே அணி கழட்டி விட்ட இலங்கை பாஸ்ட் பவுலர் மதிஷா பதிரனாவையும் ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடஸ் அணி தட்டித்தூக்கியுள்ளது.
பிரசாந்த் வீர், கார்த்திக் ஷர்மா
ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி முதலி வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைனை ரூ.2 கோடிக்கு வாங்கியது. இதேபோல் தேசிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாத (அன்கேப்டு வீரர்) இந்திய வீரரான 19 வயதான பிரசாந்த் வீரையும் சிஎஸ்கே அணி ரூ.14.20 கோடிக்கு தட்டித்தூக்கியுள்ளது.
இதேபோல் தேசிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரரான கார்த்திக் ஷர்மாவையும் சிஎஸ்கே அணி ரூ.14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதேபோல் அன்கேப்டு வீரர் அகுப் நபியை ரூ.8.40 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.
அதிக தொகைக்கு ஏலம் போன அன்கேப்டு வீரர்கள்
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன அன்கேப்டு வீரர்கள் என்ற சாதனையை பிரசாந்த் வீரும், கார்த்திக் ஷர்மாவும் பெற்றுள்ளனர். பிரசாந்த் வீர் இடது கை ஸ்பின்னர் மற்றும் பேட்டர் ஆவார்.
கார்த்திக் ஷர்மா விக்கெட் கீப்பர் பேட்டர். இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தங்களது திறமையை நிரூபித்ததால் இப்போது ஐபிஎல்லில் அதிக தொகைக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன அன்கேப்டு வீரர்கள்:
1. பிரசாந்த் வீர்: சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 14.2 கோடி - 2025
2. கார்த்திக் சர்மா: சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 14.2 கோடி - 2025
3. ஆவேஷ் கான்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ. 10 கோடி - 2022
4. கிருஷ்ணப்ப கவுதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 9.25 கோடி - 2021
5. ஷாருக்கான்: பஞ்சாப் கிங்ஸ் - ரூ. 9 கோடி - 2022
6. ராகுல் தெவாட்டியா: குஜராத் டைட்டன்ஸ் - ரூ. 9 கோடி - 2022
7. க்ருனால் பாண்டியா: மும்பை இந்தியன்ஸ் - ரூ 8.8 கோடி - 2018
8. அகுப் நபி: டெல்லி கேபிடல்ஸ் - ரூ. 8.40 கோடி - 2025
9. வருண் சக்ரவர்த்தி: கிங்ஸ் XI பஞ்சாப் - ரூ 8.40 கோடி - 2019

