Published : Jun 03, 2025, 07:07 AM ISTUpdated : Jun 03, 2025, 11:49 PM IST

Tamil News Live today 03 June 2025: 18 வருட தாகம் தீர்த்த ஆர்சிபி – முதல் முறையாக ஐபிஎல் 2025 டிராபி கைப்பற்றி சாதனை!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கருணாநிதி பிறந்த நாள், ஐபிஎல் இறுதிப்போட்டி, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:49 PM (IST) Jun 03

18 வருட தாகம் தீர்த்த ஆர்சிபி – முதல் முறையாக ஐபிஎல் 2025 டிராபி கைப்பற்றி சாதனை!

RCB become Champion in IPL 2025 : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது.

Read Full Story

11:27 PM (IST) Jun 03

ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி அணி! 18 ஆண்டு கனவு நிறைவேறியது!

2025 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றுள்ளது. பஞ்சாப் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் ஆர்சிபி அணியின் 18 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.
Read Full Story

09:31 PM (IST) Jun 03

தட்டுத்தடுமாறி ரன் சேர்த்த பெங்களூரு அணி! 191 ரன்னை ஈசியாக சேஸ் செய்யுமா பஞ்சாப்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 43 ரன்களும், ஜிதேஷ் சர்மா 25 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
Read Full Story

09:02 PM (IST) Jun 03

ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி குறித்து உருக்கமாக பதிவு போட்ட இயக்குநர் ராஜமௌலி!

SS Rajamouli Share about Shreyas Iyer : ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னதாக இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி ஷ்ரேயாஸ் மற்றும் கோலி குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

Read Full Story

08:40 PM (IST) Jun 03

வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான தீர்மானம்?

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்படலாம்.

Read Full Story

07:24 PM (IST) Jun 03

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி - பஞ்சாப் பவுலிங் தேர்வு! பேட்டிங்கில் அசத்துமா பெங்களூரு?

2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் முதல் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.
Read Full Story

07:08 PM (IST) Jun 03

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல நுழைவுக் கட்டணம் ரத்து!

திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் அருவி மற்றும் கோயில்களுக்குச் செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது. பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

06:48 PM (IST) Jun 03

விருதுநகர் சாலை விபத்து - உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி

விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்த சோணைமுத்து குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்த மூன்று மகள்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
Read Full Story

06:16 PM (IST) Jun 03

கடந்த ஆண்டில் அதிக வசூலைக் குவித்த டாப் 7 தமிழ்த் திரைப்படங்கள்

2024-ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த தமிழ்ப் படங்கள் பற்றிய விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

06:15 PM (IST) Jun 03

ரூ.10,000 மீட்க முயன்று ரூ.1 லட்சம் இழந்த கிருஷ்ணகிரி விவசாயி!

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயி ஒருவர், ரூ.10,000 தொலைந்த பணத்தை மீட்க முயன்று, போலி காவல்துறை அதிகாரியால் ரூ.1 லட்சம் மோசடி செய்யப்பட்டார். குழந்தைகளின் கல்விக்காக சேர்த்து வைத்த பணத்தை இழந்ததால் அவர் தவித்து வருகிறார்.
Read Full Story

06:07 PM (IST) Jun 03

தினமும் முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்...இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பது நல்லது என டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் மற்ற வயதினர் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடைபெறும்? இதனால் உடலுக்கு நல்லதா? கெட்டதா? இதை படிங்க உங்களுக்கே தெரியும்.

Read Full Story

05:58 PM (IST) Jun 03

weight loss - ஒரு நாளைக்கு எத்தனை வேளை சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம் ?

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலவிதமான உணவு முறைகளை கடைபிடிப்பார்கள். இவற்றில் எது சரியான முறை என பலருக்கும் தெரியாது. ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

05:57 PM (IST) Jun 03

ஐயோ! இதுக்கா உன்ன பாரின்ல படிக்க வைச்சு டாக்டராக்கண! கதறிய பெற்றோர்! நடந்தது என்ன?

தர்மபுரியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் மருத்துவர் மோனிகா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Read Full Story

05:44 PM (IST) Jun 03

use carrom seeds - ஓமத்தை தினசரி சமையலில் இப்படி பயன்படுத்தி பாருங்க...சுவை கூடும்

ஓமத்தை தினசரி சமையலில் பயன்படுத்துவது நல்லது. ஆனால் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற சரியான முறையை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் ஆரோக்கியம் மட்டுமின்றி, சமையலில் சுவையும் கூடும். ஓமத்தின் மணம் அனைவருக்கும் பிடித்து விடும்.

Read Full Story

05:23 PM (IST) Jun 03

broccoli for weight loss - புரோக்கோலி சாப்பிட்டால் உடல் எடை குறையும்...எப்படி தெரியுமா?

முட்டைகோஸ் வகையை சேர்ந்த பச்சை காய்கறியான புரோக்கோலி அல்லது பிரேக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும் என சொல்லப்படுகிறது. இதை சாப்பிட்டால் எப்படி வெயிட் குறையும் என்கிறீர்களா? இதோ உங்களுக்கான பதில்...

Read Full Story

05:13 PM (IST) Jun 03

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சீர்திருத்தம்; திருமணச் சான்று கட்டாயம் இல்லை!

இந்திய வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க/நீக்க திருமணச் சான்றிதழுக்குப் பதிலாக 'இணைப்பு J' எனப்படும் சுய-பிரமாணப் பத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தம்பதிகளுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும்.
Read Full Story

04:58 PM (IST) Jun 03

facial massage - தினமும் 10 நிமிடம் முகத்தில் இதை செய்தால் பைசா செலவில்லாமல் தேவதையாக ஜொலிக்கலாம்

முகத்தை அழகாக காட்ட பெண்கள் அதிகம் செலவிடுவது உண்டு. ஆனால் பைசா செலவு செய்யாமல், அதுவும் வீட்டில் இருந்த படியே முகத்தை அழகாக மாற்ற முடியும். தினமும் 10 நிமிடம் முகத்தில் குறிப்பிட்ட முறையில் மசாஜ் செய்தால், அப்புறம் நீங்கள் தான் உங்க ஏரியா தேவதை...

Read Full Story

04:38 PM (IST) Jun 03

டொயோட்டா ஃபார்ச்சூனர், லெஜெண்டர் நியோ டிரைவ் அறிமுகம்

டொயோட்டா புதிய நியோ டிரைவ் அவதாரத்தில் ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. மேம்பட்ட 48-வோல்ட் சிஸ்டம், மேம்பட்ட எரிபொருள் திறன் மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் செயல்திறனை வழங்குகிறது.

Read Full Story

04:36 PM (IST) Jun 03

RCB VS PBKS - பைனலில் பில் சால்ட், டிம் டேவிட் விளையாடுவார்களா? முக்கிய அப்டேட்!

ஆர்சிபி வீரர் பில் சால்ட் சொந்த நாடான இங்கிலாந்து சென்றிருந்தார். அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story

04:32 PM (IST) Jun 03

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் இந்தியா கூறியதை விட பெரியது; பாகிஸ்தான் ஒப்புதல்

மே 18 அன்று பல நாடுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அதன் ஆவணத்தில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் பாகிஸ்தானுக்கு மிக மோசமான மற்றும் பெரிய சேதம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

Read Full Story

04:22 PM (IST) Jun 03

தக் லைப்க்கு தடையா.! எந்த கன்னட படமும் தமிழகத்தில் வெளியாகாது- எச்சரிக்கும் வேல்முருகன்

கமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தின் வெளியீட்டை கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தடை செய்துள்ளன. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க  கமல் மறுத்துவிட்டார். இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கமலுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார்,

Read Full Story

04:03 PM (IST) Jun 03

விவகாரத்தில் முடிந்த முதல் திருமணம், இரண்டாவது கணவர் மரணம்.. விஜய் பட நடிகையின் சோகம்

ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, விஜய் ஆகியோருடன் நடித்த நடிகையும், 90-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவருமான நடிகை ஒருவர் தன் வாழ்க்கையில் பல சோகங்களை எதிர்கொண்டுள்ளார். அவர் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

03:51 PM (IST) Jun 03

ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதம்; ஆர்சிபி ரசிகர்கள் ஆத்திரம்

ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காண அகமதாபாத் செல்லவிருந்த ஆர்சிபி ரசிகர்கள், ஸ்பைஸ்ஜெட் விமானம் தாமதமானதால் பெங்களூரு விமான நிலையத்தில் ஆத்திரமடைந்தனர். விமானம் மணிக்கணக்கில் தாமதமானதால், ரசிகர்கள் விமான நிலைய ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Read Full Story

03:39 PM (IST) Jun 03

தமிழகத்தில் இன்றும், நாளையும்! சென்னை வானிலை மையம் கொடுத்த வார்னிங்!

தமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்குப் பிறகு வெயில் மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று மற்றும் நாளை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Read Full Story

03:33 PM (IST) Jun 03

1 கோடி லிட்டர் பால் கொள்முதல்! - மாநில அரசு நிறுவனம் அசத்தல்!

கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (கேஎம்எஃப்) தினசரி 1.06 கோடி லிட்டர் பால் சேகரித்து புதிய சாதனை படைத்துள்ளது. முன் பருவ மழை மற்றும் பசுந்தீவன கிடைப்பதால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. 

Read Full Story

03:29 PM (IST) Jun 03

ஐபிஎல் கிரிக்கெட்டில் பரிசு மழை! கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!

ஐபிஎல் பைனலில் கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்? அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரர்களுக்கு எவ்வளவு பரிசு கிடைக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

Read Full Story

03:25 PM (IST) Jun 03

மன்னிப்பு கேட்க மறுப்பு.! 'தக் லைஃப்' வெளியீடு ஒத்திவைப்பு- கமல் அதிரடி அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படம் கன்னட மொழி தொடர்பான கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து படத்தின் வெளியீடு தடை செய்யப்பட்டுள்ளது.

Read Full Story

03:22 PM (IST) Jun 03

உஷார்!! சரியா தூங்காதவங்க மூளை தன்னைத்தானே சாப்பிடும் வாய்ப்பு!! ஆய்வில் பகீர்

சரியாக தூக்கமில்லாதவர்கள் மூளை தன்னைத்தானே சாப்பிடும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

Read Full Story

03:10 PM (IST) Jun 03

குளித்த உடனே தூங்கிடாதீங்க.. இந்த பிரச்சினைகள் வரும்!

குளித்த உடனே தூங்கினால் என்னென்ன உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

03:02 PM (IST) Jun 03

8வது ஊதியக் குழு – அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு கிடைக்கும்??

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த எதிர்பார்ப்புகளையும், 8வது ஊதியக் குழுவின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளையும் இந்த் கட்டுரை ஆராய்கிறது. குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமா என்பது போன்ற முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.

Read Full Story

02:40 PM (IST) Jun 03

'தக் லைப்' திரைப்படத்தால் விஜயின் 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் சிக்கலா?

‘தக் லைஃப்’ திரைப்படத்தால் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது.

Read Full Story

02:24 PM (IST) Jun 03

ஆர்சிபி-பஞ்சாப் கிங்ஸ் பைனல் மழையால் ரத்தானால் யாருக்கு கோப்பை கிடைக்கும்? 'ரிசர்வ் டே' உண்டா?

ஆர்சிபி-பஞ்சாப் கிங்ஸ் பைனல் மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? ரிசர்வ் டே உண்டா? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

Read Full Story

02:19 PM (IST) Jun 03

ஒரே நாளில் 8 பேர் படுகொலை! சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது முதல்வரே! அன்புமணி விளாசல்!

 மது மற்றும் போதைப்பொருட்களே இதற்கு காரணம் என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட திமுக அரசு தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Read Full Story

02:19 PM (IST) Jun 03

இந்த 4 பெண்களிடம் உஷாரா இருங்க; சாணக்கியர் அறிவுரை

சாணக்கிய நீதி சாஸ்திரத்தின் படி, ஆண்கள் நான்கு வகை பெண்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். பண ஆசை, கோபம், சந்தேகம் மற்றும் அதிக செலவு செய்யும் பெண்கள் ஆண்களுக்கு துன்பத்தைத் தருவார்கள்.
Read Full Story

02:16 PM (IST) Jun 03

ஆடு திருட வந்தவர்கள் விரட்டி பிடிப்பு.! சரமாரியாக தாக்கிய கிராம மக்கள் - துடி துடித்து 2 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் அழகமாநகரியில் ஆடு, கோழி திருட வந்த இருவரை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் கல்லம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் விக்னேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Read Full Story

01:58 PM (IST) Jun 03

அண்ணா பல்கலை. வழக்கில் அமைச்சரை விசாரிக்கணும்! இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தது எதற்கு? அண்ணாமலை வீடியோ!

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோட்டூர் சண்முகம் உள்ளிட்டோர் விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Read Full Story

01:53 PM (IST) Jun 03

1975 மந்திரங்கள், 101 பூசாரிகள், 14 கோயில்கள்; அயோத்தியில் என்ன நடக்கிறது?

அயோத்தியில் ஸ்ரீராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட பிராணப் பிரதிஷ்டை விழா தொடங்கியுள்ளது. 101 வேத பண்டிதர்கள் 1975 மந்திரங்களை ஓதி யாகம் செய்கின்றனர். ஜூன் 5ல் ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் சிலைகளுக்கு பிராணப் பிரதிஷ்டை செய்யப்படும்.
Read Full Story

01:52 PM (IST) Jun 03

நடிகர்களே இல்லை - ரூ.10 லட்சம் செலவில் AI மூலம் உருவான முதல் தென்னிந்திய திரைப்படம்

பெரிய நடிகர்களோ, பெரிய பொருட்செலவோ இல்லாமல் செயற்கை நுண்ணறிவை (AI) மட்டுமே பயன்படுத்தி உருவான திரைப்படம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

01:51 PM (IST) Jun 03

யார் அந்த சார்.? 8 கேள்விகளை பட்டியலிட்டு பதில் கேட்கும் நயினார் நாகேந்திரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பின்னணியில் உள்ள 'சார்' யார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி,  வழக்கு விசாரணையில் குளறுபடிகள் இருப்பதாகவும், தமிழக அரசு உண்மையை மறைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Read Full Story

01:37 PM (IST) Jun 03

குட்டு வைத்த நீதிமன்றம்; கர்நாடக திரைப்பட சபைக்கு அவசர அவசரமாக கமல் எழுதிய சமாதான கடிதம்

கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு விளக்கம் அளித்து நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள உணர்வுப்பூர்வமான கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Full Story

More Trending News