உஷார்!! சரியா தூங்காதவங்க மூளை தன்னைத்தானே சாப்பிடும் வாய்ப்பு!! ஆய்வில் பகீர்
சரியாக தூக்கமில்லாதவர்கள் மூளை தன்னைத்தானே சாப்பிடும் வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

Is It True That The Brain Eats Itself Due To Sleep Deprivation : நம் உடலின் ஆரோக்கியம் என்பது ஊட்டச்சத்துக்கள், உணவு, நீர் மட்டுமல்ல; சரியான தூக்கமும் தான். நன்றாக தூங்குபவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நல்ல தூக்கம் உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்கும். ஏனென்றால் நாள் முழுவதும் இயங்கும் உடலுக்கு கண்டிப்பாக இரவில் ஓய்வளிக்க வேண்டும். அந்த ஓய்வு தான் மறுநாள் நீங்கள் இயங்குவதற்கு தேவையான ஆற்றலை வழங்கும். சரியாக ஓய்வு எடுக்காமல் இரவெல்லாம் கண் விழிப்பது ஆரோக்கியமானதல்ல.
உறக்கம் இல்லாமல் இருப்பது நாள்பட்ட நோய்களின் தீவிரத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி மூளையின் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. உங்களுக்கு தெரியுமா? இரவில் தொடர்ந்து தூக்கத்தை தவிர்ப்பவர்களின் மூளை தன்னைத்தானே சாப்பிடத் தொடங்கும். இது ஆய்வில் வந்த தகவல்.
இதுதொடர்பாக கடந்த 2017இல் நியூரோ சயின்ஸ் இதழில் ஒரு ஆய்வு வெளியானது. அதில் நீண்டகாலமாக தூக்கமின்மை பிரச்சனை கொண்டவரின் மூளை தன்னைத்தானே சாப்பிடத் தொடங்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
மூளை ஏன் தன்னைத்தானே சாப்பிடுகிறது?
குறைவாக தூங்குவது மூளையின் முக்கியமான நரம்பு செல்களின் அலகுகளை இழக்கச் செய்கிறது. மனிதர்கள் தூங்கும்போது தான் மூளையில் உள்ள ஆஸ்ட்ரோசைட்டுகள் என்ற மூளை செல்கள் சேதமான அல்லது பயன்படுத்தப்படாத நரம்பியல் இணைப்புகளை அழிக்கும் செயல்பாட்டில் ஈடுபடுகின்றன.
ஒருவர் நீண்டகாலம் சரியாக தூங்காமல் இருந்தால் இந்த சேதமான செல்கள் அழிக்கும் செயல்முறை பாதிக்கிறது. இதனால் அந்த செல்கள் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக ஆஸ்ட்ரோசைட்டுகள் ஆரோக்கியமான செல்களையும் நாளடைவில் அழிக்கத் தொடங்குகின்றன. இதனால் மூளையில் ஏற்படும் பாதிப்பே சிந்திக்கவும், நியாகத்தில் வைக்கவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இது மட்டுமின்றி மைக்ரோக்லியா, அல்சைமர் நோயில் ஏற்படுவதை போலவே மற்றொரு செல்வகை மிகையான செயல்பாட்டைக் கொண்டிருக்கும். இவை தொடர்ச்சியான தூக்கமின்மையால் மோசமான பாதிப்புகளை உண்டாக்கும். நல்ல தூக்கம் தான் ஆரோக்கியத்தின் அடிப்படை. தூக்கமின்மை பிரச்சனை மோசமான மூளை பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் கவனமாக இருங்கள். நன்றாக தூங்குங்கள்.