2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் முதல் கோப்பைக்காக போட்டியிடுகின்றன.
2025 ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரண்டு அணிகளும் முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் களம் இறங்குவதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் முந்தைய ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடன் களம் இறங்குகின்றன.
டாஸ் வென்றது பஞ்சாப் அணிக்கு சாதகமானதாக இருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடந்த 8 போட்டிகளில் 6 இல் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இது பெங்களூரு அணிக்கு சாதகமான செய்தியாக உள்ளது.
பஞ்சாப் அணி:
டாஸ் வென்ற பிறகு பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர், “நாங்கள் பந்து வீசப் போகிறோம். இது ஒரு அற்புதமான நாள். ரசிகர்களின் ஆதரவு உற்சாகம் அளிக்கிறது. நாங்கள் செய்ய வேண்டியது இங்கே வந்து திறமையைக் காட்டுவதுதான். வீரர்கள் அனைவரும் நல்ல உடல்தகுதியுடனும் அற்புதமான மனநிலையிலும் இருக்கிறார்கள்.” என்றார்.
“இது வழக்கமான இன்னொரு போட்டி என்று சொல்ல மாட்டேன். இது இறுதிப் போட்டி. நாங்கள் அதற்குரிய தீவிரத்துடன் விளையாடப் போகிறோம். கோப்பையை வெல்வது பற்றி யோசிப்பதே உணர்வுபூர்வமானது.” எனவும் கூறினார்.
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ்(டபிள்யூ), ஷ்ரேயாஸ் ஐயர்(கேட்ச்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரவீன் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், ஹர்ப்ரீத் ப்ரார்
பெங்களூரு அணி:
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதர் கூறுகையில், “நாங்களும் பந்து வீசவே விரும்பினோம். பிட்ச் கடினமாகத் தெரிகிறது. நல்ல ஸ்கோரை பதிவு செய்து அவர்களை அழுத்தத்தில் சிக்க வைக்க முயற்சி செய்வோம். இதுவரை நாங்கள் நன்றாகவே விளையாடி வருகிறோம். இது எங்களுக்கு இன்னொரு ஆட்டம்.” எனத் தெரிவித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேட்ச்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (வ), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்
இம்பாக்ட் சப்ஸ்: ரசிக் சலாம், மனோஜ் பந்தேஜ், டிம் சீஃபர்ட், ஸ்வப்னில் சிங், சுயாஷ் சர்மா.


