ஆர்சிபி-பஞ்சாப் கிங்ஸ் பைனல் மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? ரிசர்வ் டே உண்டா? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
What Happens if RCB-PBKS IPL Final Cancelled Due to Rain: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. 18 ஆண்டு காலம் கோப்பைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் விராட் கோலி மற்றும் ஆர்சிபியின் கனவு நனவாகுமா? இல்லை தனது தனித்துவமான கேப்டன்சி மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியை பைனல் வரை அழைத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு முதல் கோப்பையை பெற்றுக் கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆர்சிபி-பஞ்சாப் கிங்ஸ் பைனலில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், போட்டி நடக்கும் குஜராத்தின் அஹமதாபாத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளின் ரசிகர்களும் கவலையில் மூழ்கியுள்ளனர். அதாவது ஆட்டத்தின் குறுக்கே 2% முதல் 5% வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது ஆட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், ஒருவேளை ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் எந்த அணிக்கு கோப்பை கொடுக்கப்படும்? ஆட்டத்தை மற்றொரு நாள் நடத்தும் 'ரிசர்வ் டே' உள்ளதா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.
பைனல் ரத்தானால் என்ன நடக்கும்?
நடப்பு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை குவாலிஃபையர் 1, குவாலிஃபையர் 2 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளில் ரிசர்வ் டே இல்லை. ஆனால் இறுதிப்போட்டியில் ரிசர்வ் டே இல்லை. அதாவது இன்றைய இறுதிப்போட்டியை மழையால் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் நாளை (ஜூன் 4 புதன்கிழமை) போட்டியை நடத்திக் கொள்ளலாம். சரி.. நாளையும் மழை பெய்து போட்டி ரத்தானால் என்ன செய்வார்கள்? கோப்பையை யாருக்கு கொடுப்பார்கள்? என நீங்கள் கேட்கலாம்.
ரிசர்வ் டேயிலும் மழை பெய்தால் கோப்பை யாருக்கு?
அப்படி ஒருவேளை நாளையும் மழை பெய்து போட்டி ரத்தானால் லீக் போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்ற பஞ்சாப் அணிக்கே கோப்பை கொடுக்கப்படும். லீக் போட்டிகளின் முடிவில் ஆர்சிபியும், பஞ்சாப் கிங்ஸும் தலா 19 புள்ளிகளை பெற்றுள்ளன. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் ரன் ரேட்டில் (0.372) ஆர்சிபியை விட (ஆர்சிபி ரன் ரேட்: 0.301) நூழிலையில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு இதுதான்
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கே கோப்பை வழங்கப்படும். ஆர்சிபி வெறுங்கையுடன் செல்ல வேண்டியதிருக்கும். ஆனால் இப்படி நடக்காமல், முழு போட்டியும் நடைபெற்று இரு அணிகளும் தங்கள் திறமையை நிரூபித்து ஒரு அணி கோப்பையை கையில் ஏந்த வேண்டும்? எனபதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
