2025 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றுள்ளது. பஞ்சாப் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் ஆர்சிபி அணியின் 18 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.
2025 ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றுள்ளது. பஞ்சாப் அணியை ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் ஆர்சிபி அணியின் 18 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.
191 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சுமாரான தொடக்கம் கிடைத்தது. 5வது ஓவரின் கடைசி பந்தில் பிரியான்ஷ் ஆர்யா 24 ரன்களில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்குப் பின் பிரப்சிம்ரனும் ஜோஷ் இங்கிலிஷும் பந்துகளை சீரான இடைவெளியில் பவுண்டரிக்கு விரட்டினர். குருனால் பாண்டியா பிரப்சிம்ரன் சிங்கை 26 ரன்களில் அவுட்டாக்கினார்.
கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் ஒருரன் மட்டும் எடுத்து ஏமாற்றினார். ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய பந்தை அலட்சியமாக தட்டிவிட முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட் கொடுத்தார். மறுபக்கம் இங்கிலிஷ் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆனால் அவரும் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.
திருப்புமுனை விக்கெட்:
இங்கிலிஷ் அவுட்டானதும் ஆட்டம் பெங்களூருவின் பக்கம் சாய்ந்தது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். 20 ஓவர்களில் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஆர்சிபிஐ முதலில் பேட்டிங் செய் வைத்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததாலும் எல்லா வீரர்களும் அணியின் ஸ்கோரை உயர்த்த பங்களித்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 190 ரன்கள் எடுத்தது.
பந்துவீச்சில் ஆர்சிபி பவுலர்கள் தங்கள் வேலையை சிறப்பாகச் செய்தனர். க்ருனால் பாண்டியா 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். புவனேஷ்வர் குமாரும் 17வது ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். யஷ் தயாள், ஹேசல்வுட், ஷெப்பார்டு மூவரும் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.
