இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:10 PM (IST) Dec 17
ஆர்எஸ்எஸ் திருமாவளவன், ஆர்எஸ்எஸ் ஸ்டாலின். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆர்எஸ்எஸ் கம்யூனிஸ்டாக இருந்தால் கூட நாங்கள் சந்தோஷப்படுவோம்.
12:05 PM (IST) Dec 17
நீங்க கம்முனு இருங்க இல்ல கும்முன்னு இருங்க ஆனா பேச வேண்டிய நேரத்தில் பேசுங்க என தவெக தலைவர் விஜய்க்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கி உள்ளார்.
11:44 AM (IST) Dec 17
பிரேசிலின் குவைபா நகரில் ஏற்பட்ட கடும் புயலால், ஹவான் மெகாஸ்டோரில் இருந்த 40 மீட்டர் உயர சுதந்திரச் சிலை சரிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
11:43 AM (IST) Dec 17
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய்யின் முதல் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தால் ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11:41 AM (IST) Dec 17
தொடரைக் கைப்பற்றும் நோக்கில் இந்தியா இன்று 4வது போட்டியில் களமிறங்குகிறது. துணை கேப்டன் சுப்மன் கில் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
11:40 AM (IST) Dec 17
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமினில் வெளியே வர முடியாதபடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிசில்டா புகார் அளித்துள்ளார்.
11:36 AM (IST) Dec 17
முன்னணி ஐடி நிறுவனமான ஐபிஎம், பெங்களூரில் அப்ளிகேஷன் டெவலப்பர் – கிளவுட் ஃபுல்ஸ்டேக் பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. டிகிரி முடித்து, ஜாவா, ஸ்பிரிங் பூட் போன்ற தொழில்நுட்பங்களில் திறமை உள்ள பட்டதாரிகள் இந்த சிறந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
11:35 AM (IST) Dec 17
Birth Stars: ஜோதிடத்தின்படி சில நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமல், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவார்களாம். அந்த நட்சத்திரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
11:20 AM (IST) Dec 17
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய பயணத்தின் போது ஆனந்த் அம்பானியின் வந்தாரா வனவிலங்கு மையத்திற்குச் சென்றார். அங்கு, ஆனந்த் அம்பானி மெஸ்ஸிக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.
11:16 AM (IST) Dec 17
தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை இங்கு காணலாம்.
11:11 AM (IST) Dec 17
தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கம் (TN DHS) 2026-ஆம் ஆண்டிற்காக 462 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. DEO, ஆய்வக நிபுணர், செவிலியர், மருத்துவர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு அரியலூர், மதுரை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
10:55 AM (IST) Dec 17
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச மாதிரி ஆளுமைத் தேர்வை நடத்துகிறது. இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு டெல்லியில் நடைபெறும் ஆளுமைத் தேர்வுக்கு சென்றுவர பயணச் செலவாக ரூ.5,000 வழங்கப்படும்.
10:51 AM (IST) Dec 17
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற ஜனவரி 9-ந் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், அப்படத்தின் கதை லீக் ஆகி உள்ளது. அதைப்பற்றி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10:37 AM (IST) Dec 17
Sani Peyarchi 2026: ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக அறியப்படும் சனி பகவான் தனது சக்தியை இழந்திருக்கிறார். அது குறித்தும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
10:37 AM (IST) Dec 17
உலகளாவிய கௌரவம்: இது வெறும் மரியாதையா அல்லது இந்திய-ஆப்பிரிக்க உறவுகளின் புதிய அத்தியாயமா? பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான ‘கிரேட் ஹானர் நிஷான்’ வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் ஆனார்.
10:23 AM (IST) Dec 17
தங்கள் அற்ப அரசியலுக்காக பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியது திமுக. இதுபோன்ற சதி திட்டங்களால், மக்களுக்காக உழைக்கும் நேர்மையான தலைவரான எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளட்டும்
10:22 AM (IST) Dec 17
தமிழக அரசு, பெண்கள் மற்றும் திருநங்கையர்கள் சுயதொழில் தொடங்க உதவும் வகையில் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தொழில் முனைவோர்களுக்கு ரூ.10 லட்சம் வரை பிணையமில்லா கடனும், ரூ.2 லட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.
09:59 AM (IST) Dec 17
09:59 AM (IST) Dec 17
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீது தப்பு இருப்பதாக அருணின் அம்மா ஏத்திவிட்ட நிலையில், சீதா அதை நம்பி, மீனாவிடம் சண்டைபோட்டுள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.
09:53 AM (IST) Dec 17
சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் டாலர் மதிப்பு ஏற்ற இறக்கமே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
09:49 AM (IST) Dec 17
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி முகமது அலி ஜின்னா சென்னையில் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக மாறுவேடத்தில் வாசனை திரவியம் விற்று வாழ்ந்து வந்த இவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
09:45 AM (IST) Dec 17
சின்ன சின்ன பெண் குழந்தைகளையும் மது குடிக்க வைத்தது தான் திமுக அரசின் சாதனை என சாடியுள்ள சௌமியா அன்புமணி மது குடிப்பதில் விழுப்புரம் முதல் மாவட்டமாக இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.
09:24 AM (IST) Dec 17
காற்று மாசுபாடு 'மிக மோசமான' நிலையை எட்டியுள்ளதால், அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிமீறும் வாகனங்கள் மீது கடும் அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
08:56 AM (IST) Dec 17
கோவில்பட்டியில் சமீபத்தில் திறக்கப்பட்ட டிமார்ட் கடைக்கு திருவிழா போல மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
08:55 AM (IST) Dec 17
தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23-ல் முடிவடையும் நிலையில், விடுமுறை நாட்கள் குறித்த குழப்பம் நிலவியது. தற்போது, விடுமுறையை நீட்டித்து, ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
08:49 AM (IST) Dec 17
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் ஆதி குணசேகரன் இனி வீட்டுக்கே வர மாட்டார் என சாமியாடி கூறி இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
08:43 AM (IST) Dec 17
ஒரு தமிழனின் சரித்திரத்தை தமிழ் படமாக எடுக்கும் போது தெலுங்கராக சித்தரித்தின் உள் நோக்கம் என்ன? நாயுடு சாதியை தூக்கி பிடித்தால் விஜய நகர கூஜா சினிமா... ஓட்டுக்காக பூணூல் இல்லா அரசியல்... இவ்வளவுதான் கமலின் சமத்துவம்