- Home
- Sports
- Sports Cricket
- ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
கிரீனை ஏலத்தில் எடுப்பதில் கேகேஆர் மிகவும் அவசரமாகச் செயல்பட்டதாகவும், ரூ.25 கோடிக்கு முன்பே சிஎஸ்கே-வை போட்டியிலிருந்து வெளியேற்றும் திறன் அவர்களுக்கு இருந்ததாகவும் அஸ்வின் கருத்து தெரிவித்தார்

ஐபிஎல் மினி ஏலம்
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இடையே நடந்த கடுமையான ஏலப் போட்டியை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆய்வு செய்தார். இதில் சென்னை அணி ஒரு வாய்ப்பை தவறவிட்டதாக குறிப்பிட்டார்.
கொல்கத்தா அணி கிரீனை ரூ.25.20 கோடிக்கு வாங்கியது
கொல்கத்தா அணி கிரீனை ரூ. 25.20 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். மினி ஏலத்தில் மற்ற அணிகளை விட அதிக பட்ஜெட் இருந்ததால், இரு அணிகளும் கீரினை வாங்க கடுமையாகப் போட்டியிட்டன, ஆனால் விலை ரூ. 25 கோடியைத் தாண்டியதும் சிஎஸ்கே பின்வாங்கியது.
கேகேஆர் மிகவும் அவசரமாக செயல்பட்டது
கிரீனை ஏலத்தில் எடுப்பதில் கேகேஆர் மிகவும் அவசரமாகச் செயல்பட்டதாகவும், ரூ.25 கோடிக்கு முன்பே சிஎஸ்கே-வை போட்டியிலிருந்து வெளியேற்றும் திறன் அவர்களுக்கு இருந்ததாகவும் அஸ்வின் கருத்து தெரிவித்தார்.
‘பஞ்சாப் போன்ற சில அணிகள் ஏலத்தில் பொறுமையாக இருந்தன. அதுபோல கேகேஆர்-ம் ஏலம் கேட்டிருந்தால், சிஎஸ்கே கேமரூன் கிரீனை முன்பே விட்டுக் கொடுத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். சிஎஸ்கே ஏலம் கேட்க வேண்டும் என்பதற்காகவே கேட்டதாக கேகேஆர் நினைத்தது’ என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறினார்.
சிஎஸ்கே வாய்ப்பை இழந்தது
கிரீனை வாங்காததன் மூலம் சிஎஸ்கே ஒரு வாய்ப்பை இழந்தாலும், கீரின் ஒரு தலைமுறை வீரர் என்பதால், கேகேஆர் அணிக்கு இது ஒரு அருமையான தேர்வு என்று அஷ்வின் கூறினார். 'கேமரூன் கிரீன் சிஎஸ்கேவுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருந்திருப்பார் என்று நான் உணர்ந்தேன்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு வாய்ப்பை தவறவிட்டனர். விலையைப் பற்றி கவலை இல்லை, கிரீன் ஒரு தலைமுறை வீரர், கேகேஆர்க்கு இது ஒரு சிறந்த கையகப்படுத்தல்" என்று அஸ்வின் மேலும் கூறினார்.

