- Home
- Cinema
- தாய்க்கு அளித்த வாக்குறுதி! மரங்களுக்கு உயிர் கொடுக்கும் வில்லாதி வில்லன் ஷயாஜி ஷிண்டே: நெகிழ்ச்சிப் பின்னணி!
தாய்க்கு அளித்த வாக்குறுதி! மரங்களுக்கு உயிர் கொடுக்கும் வில்லாதி வில்லன் ஷயாஜி ஷிண்டே: நெகிழ்ச்சிப் பின்னணி!
Sayaji Shinde Mother Promise Tree Plant : சினிமாவில் மிரட்டும் வில்லனாக இருந்தால் நிஜத்தில் மரங்களின் காவலன். தனது தாய்க்கு அளித்த வாக்குறுதிக்காக லட்சக்கணக்கான மரங்களை நட்டு வரும் நடிகர் ஷயாஜி ஷிண்டேயின் நெகிழ்ச்சியான பின்னணி பற்றி பார்க்கலாம்.

ஷாயாஜி ஷிண்டே
பிரபல நடிகரும் குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ஷாயாஜி ஷிண்டே. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள சாகர்வாடி என்ற சிறிய கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். விவசாயக் குடும்பம் என்பதால் என்னவோ இவருக்கு சமூகத்தின் மீது அதிக பற்று ஏற்பட்டுள்ளது. ஆம், ஏராளமான மரங்களை நட்டு வந்துள்ளார். இன்னமும் வருகிறார்.
மராத்தி மொழியில் கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார், மேலும் 1978 ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் போது மகாராஷ்டிரா அரசாங்கத்தின் நீர்ப்பாசனத் துறையில் இரவுக் காவலாளியாக அதிகபட்ச சம்பளம் ஆனா ரூ. 165 என்ற தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
நடிப்பின் தொடக்கம்:
நடிப்பின் மீது ஷாயாஜி ஷிண்டே ஆர்வம் இருந்ததால் நடிக்க வேண்டும் என்று அவர் மனதில் எண்ணம் தோன்றியது. தனது நடிப்பு வாழ்க்கையை 1978 இல் மராத்தி நாடகங்களில், குறிப்பாக ஓரங்க நாடகங்களில் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டு 'ஜுல்வா' என்ற மராத்தி நாடகத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. அன்றிலிருந்து அவர் மூத்த கலைஞர்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கினார். பின்னர், அவர் மராத்தி திரையுலகிற்கு மாறி அதன் பிறகு நடிக்கத் தொடங்கினார். இவர் 2002 ஆம் ஆண்டு அல்கா ஷிண்டே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சித்தார்த் ஷிண்டே என்று ஒரு மகன் இருக்கிறார்.
நடிப்பின் சிறப்பு:
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இன்று அனைத்து மொழிகளிலும் இவர் நடிகராகவும் குறிப்பாக வில்லனாக நடித்திருக்கிறார். தமிழில் வில்லனாகவும் ஹீரோயினிகளுக்கு அப்பாவும் பல கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழ் தெரியாத பாரதி:
ஷாயாஜி ஷிண்டே அவர்களுக்கு தமிழே தெரியாதாம் ஆனால் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கவிஞரும், எழுத்தாளருமான, சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய பாரதி வேடத்தில் நடித்து டோலிவுட் ரசிகர்களின் இதயங்களை வென்றார். அவரது முயற்சிகள் பாராட்டப்பட்டு, மாநில விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மரக்கன்று நடுதல்:
நடிகர் சாயாஜி ஷிண்டே, தனது சஹ்யாத்ரி தேவ்ராய் என்ற அமைப்பின் மூலம் விரிவான மரக்கன்று நடும் பணிகளுக்கு பெயர் பெற்ற ஒரு தீவிர சுற்றுச்சூழல் ஆர்வலர். பல்லுயிர்பெருக்கத்தை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும், பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடவும் மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான பூர்வீக மரங்களை நட்டியுள்ளார்.
தாயின் இறப்பு:
தனது தாய் இருப்பதற்கு முன்பு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு இறந்திருக்கிறார். அதனைத் தாங்கிக் கொள்ளாத ஷாயாஜி ஷிண்டே மரம் நட்டால் ஆக்சிஜன் கிடைக்கும் என்பதை மையமாகக் கொண்டு தன் தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் . பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகளை இந்தப் பசுமை முயற்சிகளில் ஈடுபடுத்துகிறார். மரங்கள் முக்கியமான, தன்னலமற்ற வழங்குநர்களாக அவர் ஆதரிக்கிறார், மேலும் வளர்ச்சிக்காக மரம் வெட்டுவதற்கு எதிராகப் பேசுகிறார், அதை ஒரு உணர்ச்சிபூர்வமான மற்றும் தார்மீகப் பிரச்சினையாகக் கருதுகிறார்.
ஏன் மரம் முக்கியமானது:
ஷிண்டேவின் முயற்சிகள் எளிய நடவு முறைக்கு அப்பாற்பட்டவை; அவை இயற்கையுடன் நிலையான உறவை உருவாக்குதல், பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளிலிருந்து பயனடைவதை உறுதி செய்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.