இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், முதல்வர் ஸ்டாலின், தங்கம் வெள்ளி புதிய உச்சம், சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:18 AM (IST) Jan 25
அஜித் குமாரின் 'மங்காத்தா' திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளை விட இரண்டாம் நாள் வசூல் அதிகரித்து, விஜய்யின் 'கில்லி' ரீரிலீஸ் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
08:49 AM (IST) Jan 25
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1989-ல் நடித்த 'ஹம் மே ஷாஹென்ஷா கோன்' என்ற இந்தித் திரைப்படம், சுமார் 37 வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வரவுள்ளது. இது ரஜினி ரசிகர்களுக்கு இளம் வயது சூப்பர் ஸ்டாரை மீண்டும் திரையில் காண ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.
08:23 AM (IST) Jan 25
இயக்குனர் மோகன் ஜி, மங்காத்தா போன்ற பெரிய படங்களின் மறுவெளியீட்டால் தனது திரௌபதி 2 மக்களிடம் சரியாக சென்றடையவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். படம் பார்க்காமலேயே பரப்பப்படும் தவறான விமர்சனங்களால் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
08:21 AM (IST) Jan 25
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) விதிகளில் மாற்றம் செய்துள்ளது. பிப்ரவரி 15, 2026 முதல், இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பான விவரங்களை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
07:23 AM (IST) Jan 25
ஸ்கோடா இந்தியா தனது 2026 குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் டிசைன், ஃபீச்சர்கள், மற்றும் எஞ்சினில் பல அப்டேட்களுடன் வருகிறது. பேஸ் வேரியன்ட்டிலேயே பல பிரீமியம் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
06:53 AM (IST) Jan 25
நடிகர் அஜித் குமாரின் மங்காத்தா பட பாணியில் ரூ.400 கோடி பணம் நிரப்பப்பட்ட இரண்டு கன்டெய்னர்கள் திடீரென மாயமான சம்பவம் தற்போது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.