2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் கலை, சமூகப் பணி, இலக்கியம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் பத்ம விருதுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
மிருதங்க வித்வான் பக்தவச்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது
இந்த நிலையில், 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பக்தவச்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை விஞ்ஞானி மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன்
இதேபோல் கால்நடை விஞ்ஞானி மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், சேலத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர், நீலகிரியைச் சேர்ந்த குரும்பா ஓவியர் ஆர்.கிருஷ்ணன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பழனிவேல் என்பவருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


