- Home
- Cinema
- கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு... அதிக விருதுகளை தட்டிதூக்கியது யார்? வின்னர்ஸ் லிஸ்ட் இதோ
கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு... அதிக விருதுகளை தட்டிதூக்கியது யார்? வின்னர்ஸ் லிஸ்ட் இதோ
கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை திமோதி சாலமே வென்றார். முழு வின்னர்ஸ் லிஸ்டை பார்க்கலாம்.

Golden Globes 2026 winners list
2026-ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடந்த விருது வழங்கும் விழாவில், மியூசிக்கல்/காமெடி பிரிவில் 'மார்ட்டி சுப்ரீம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை திமோதி சாலமே வென்றார். 'இஃப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வுட் கிக் யூ' படத்தில் நடித்ததற்காக ரோஸ் பைரன் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிராமா பிரிவில் சிறந்த படமாக 'ஹாம்நெட்' தேர்வு செய்யப்பட்டது.
மியூசிக்கல்/காமெடி பிரிவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது டிகாப்ரியோவின் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' படத்திற்கு கிடைத்தது. இப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன் சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த திரைக்கதைக்கான விருதையும் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' வென்றது. சிறந்த அசல் இசைக்கான விருதை லுட்விக் கோரன்சன் பெற்றார். மேலும், சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கான விருதை 'சின்னர்ஸ்' திரைப்படம் வென்றது.
கோல்டன் குளோப் விருது வென்றவர்கள் பட்டியல்
டேயானா டெய்லர் சிறந்த துணை நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார். 'தி சீக்ரெட் ஏஜென்ட்' படத்தில் நடித்ததற்காக வாக்னர் மௌரா டிராமா பிரிவில் சிறந்த நடிகராகவும், 'சென்டிமென்டல் வேல்யூ' படத்தில் நடித்ததற்காக ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் சிறந்த துணை நடிகராகவும் விருது பெற்றனர். அனிமேஷன் பிரிவில் சிறந்த படமாக 'கே-பாப் டீமான் ஹண்டர்ஸ்' தேர்வு செய்யப்பட்டது. ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் சிறந்த படமாக பிரேசிலிய திரைப்படமான 'தி சீக்ரெட் ஏஜென்ட்' தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த நடிகர் யார்?
லிமிடெட் சீரிஸ் பிரிவில், நெட்ஃபிளிக்ஸ் தொடரான 'அடோலசன்ஸ்' தொடருக்காக ஸ்டீபன் கிரஹாம் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார். தொலைக்காட்சி பிரிவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை அதே தொடரில் நடித்த ஓவன் கூப்பர் வென்றார். இதன் மூலம், கோல்டன் குளோப் விருது பெறும் இளம் நடிகர் என்ற பெருமையை கூப்பர் பெற்றுள்ளார். லிமிடெட் சீரிஸ் பிரிவில் சிறந்த வெப் சீரிஸுக்கான விருதும் 'அடோலசன்ஸ்' தொடருக்கே கிடைத்தது.
4 விருதுகளை தட்டிதூக்கிய படம்
லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கிய 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம் பரிந்துரைப் பட்டியலில் முன்னணியில் இருந்தது. காமெடி/மியூசிக்கல் பிரிவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், திரைக்கதை, துணை நடிகை உட்பட 4 விருதுகளை இப்படம் வென்றது. லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜார்ஜ் குளூனியைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த நடிகருக்கான விருதை திமோதி சாலமே கைப்பற்றினார். இந்த முறை கோல்டன் குளோப் நிகழ்ச்சியை ஸ்டாண்ட்-அப் காமெடியன் நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கினார். டிராமா பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதை பிரியங்கா சோப்ரா அறிவித்தார். கோல்டன் குளோப் விருதுகள், வரவிருக்கும் அகாடமி விருதுகளுக்கான ஒரு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

