- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!
Pandian Stores 2: 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரில், கதிர்-ராஜி திருமணத்தை தானே நடத்தி வைத்த ரகசியத்தை உடைக்கிறார் கோமதி. இந்த உண்மையால் கோபமடைந்த அவரது அண்ணன்கள் குடும்பம் வெளியேற, கணவன் பாண்டியனுக்கும் கோமதிக்கும் இடையே விரிசல் உண்டாகியுள்ளது.

தாய் வீட்டுடன் இணைய விரும்பும் கோமதி
விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக மயில் தொடர்பான சட்டப்போராட்டங்கள் மற்றும் காவல்நிலையப் பிரச்சனைகளால் பாண்டியன் குடும்பம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தது. இந்தப் பிரச்சனையின் போது கோமதியின் அண்ணன்கள் பாண்டியனுக்கு ஆதரவாக நின்றதால், பிரிந்திருந்த இரு குடும்பங்களும் மீண்டும் இணைந்துவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக, கோமதி தனது அண்ணன் குடும்பத்தினரைத் தனது வீட்டிற்குச் சிறப்பு விருந்துக்காக அழைத்திருந்தார்.
சமாதானத்தை விரும்பாத கோமதியின் அண்ணன் சக்திவேல்
விருந்து உபசரிப்பின் போது எதிர்பாராத விதமாகப் பேச்சு கதிர் மற்றும் ராஜியின் திருமணத்தைப் பற்றித் திரும்பியது. கோமதியின் அண்ணன் சக்திவேல், தனது வஞ்சகமான எண்ணத்தால் அந்த இடத்திலும் கலகத்தை மூட்டினார். கதிர் மற்றும் ராஜிக்கு இடையில் நடந்த திருமணத்தை மிகவும் கேவலமாகப் பேசிய அவர், கதிர் ஒரு சுயநலவாதி என்றும், ராஜியின் குடும்பச் சொத்துக்களை அபகரிக்கவே கோமதி இவர்களைச் சேர்த்து வைத்து நாடகமாடுகிறார் என்றும் அடுக்கடுக்கான பழிகளைச் சுமத்தினார். தனது மகனின் நேர்மையைப் பற்றித் தவறாகப் பேசுவதைக் கண்டு பொறுமையிழந்த கோமதி, ஆவேசத்தில் நீண்ட நாட்களாக மறைத்து வைத்திருந்த அந்தப் பெரிய ரகசியத்தை உடைத்தார்.
"என் மகளின் வாழ்க்கையில் முடிவெடுக்க நீ யார்?"
"கதிர் மற்றும் ராஜிக்கு நான்தான் முன்னின்று திருமணம் செய்து வைத்தேன்" என்று கோமதி ஊர் அறிய உண்மையைச் சொன்னது, அங்கே இருந்த அனைவரையும் நிலைகுலையச் செய்தது. குறிப்பாக, நீதியான வழியில் மட்டுமே நடப்பதாகக் கருதும் பாண்டியனுக்கு, இது தனது முதுகில் குத்திய செயலாகத் தெரிந்தது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த முத்துவேல், "என் மகளின் வாழ்க்கையில் முடிவெடுக்க நீ யார்?" என்று கோமதியைக் கடிந்துகொண்டு, தன் குடும்பத்துடன் பாண்டியன் வீட்டை விட்டு வெளியேறினார்.
பாண்டியன் கூறிய ஒற்றை வார்த்தை.! தவித்த கோமதி.!
இந்தச் சம்பவத்தால் கோமதிக்கும் பாண்டியனுக்கும் இடையிலான திருமண உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கோமதி மன்னிப்பு கோரியும், "கணவன் - மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய நம்பிக்கை என்பது கண்ணாடி போன்றது; அது ஒருமுறை உடைந்துவிட்டால் மீண்டும் ஒட்ட வைக்க முடியாது" என பாண்டியன் மிகவும் வேதனையுடன் கூறிவிட்டார். இந்த ரகசியம் வெளியானதைத் தொடர்ந்து, பாண்டியன் குடும்பத்திற்குள் இருக்கும் ஒற்றுமை நிலைத்திருக்குமா அல்லது குடும்பம் சிதறுமா என்பதே வரும் வாரங்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

