- Home
- Tamil Nadu News
- ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
ஒபிஎஸ்ஸின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. விஜய்யுடன் கை கோர்த்த அதிமுக முன்னாள் அமைச்சர்!
கு.ப.கிருஷ்ணன் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவர். ஆகவே அவரது செல்வாக்கு தவெகவின் பலத்தை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெகவில் இணைந்தார் கு.ப.கிருஷ்ணன்
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கு.ப. கிருஷ்ணன் விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று (ஜனவரி 25) இணைந்துள்ளார். அதிமுகவில் மூத்த நிர்வாகியாக வலம் வந்த கு.ப.கிருஷ்ணன், 1991-1996 காலக்கட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.
இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் பக்கம் நின்றார்
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இவர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நின்றார். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை எதிர்த்து ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் மற்றும் சட்டப் போராட்டங்களில் கு.ப. கிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்தார். ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வதா? இல்லை திமுக பக்கம் செல்வதா? என குழம்பி நிற்கிறார்.
தவெகவுக்கு பலம் சேர்க்கும்
இதனால் ஓபிஎஸ்ஸுடன் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுக பக்கம் சென்று விட்டனர். இப்போது கு.ப. கிருஷ்ணன் தவெக பக்கம் சென்றுள்ளார். இவர் தவெகவுக்கு சென்றதில் செங்கோட்டையன் பெரும் பங்கு வகித்துள்ளதாக கூறப்படுகிறது.
செங்கோட்டையனை தவிர ஜே.சி.டி. பிரபாகர் போன்ற மூத்த அதிமுக தலைவரும் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, கு.ப.கிருஷ்ணனின் வருகை அக்கட்சிக்கு அரசியல் அனுபவம் மிக்க ஒரு தலைவரைக் கொடுத்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்
கு.ப.கிருஷ்ணன் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவர். ஆகவே அவரது செல்வாக்கு தவெகவின் பலத்தை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன், ''தமிழக மக்கள் இனி ஏமாறத் தயாராக இல்லை. தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும்.
மக்கள் மத்தியில் தமிழக வெற்றி கழகத்திற்குப் பெருகி வரும் ஆதரவைப் பார்க்கும் போது, நாளைக்கே தேர்தல் நடத்தினாலும் தவெக தான் வெற்றி பெறும் என்ற சூழல் நிலவுகிறது. நடிகர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஒரு நேர்மையான நல்லாட்சி அமையும். தமிழக அரசியலில் இது ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகும்'' என்று கூறியுள்ளார்.

