- Home
- Business
- மாதம் ரூ.10,880 கிடைக்கும்.. ஒரே முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க வருமானம்! LIC திட்டம் சூப்பர்
மாதம் ரூ.10,880 கிடைக்கும்.. ஒரே முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க வருமானம்! LIC திட்டம் சூப்பர்
LIC ஸ்மார்ட் பென்சன் திட்டம் என்பது ஒரு உடனடி ஓய்வூதியத் திட்டமாகும், இதில் ஒரே முறை முதலீடு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் உறுதியான ஓய்வூதியம் பெறலாம்.

மாதந்தோறும் ரூ.10,880 வருமானம்
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் LIC (Life Insurance Corporation of India) அனைத்து வயதினருக்கும் ஏற்ற பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. இதில் சில திட்டங்கள், ஓய்வுக்குப் பிறகு குடும்ப நிதியை சீராக வைத்திருக்க உறுதியான வருமானம் கிடைக்கும் வகையில் உள்ளது. அந்த வரிசையில் அதிகம் பேசப்படும் திட்டங்களில் ஒன்று LIC Smart Pension Plan ஆகும். இது ஒரு உடனடி ஓய்வூதிய திட்டம் (உடனடி வருடாந்திரம்) என்பதால், ஒரே முறை முதலீடு செய்தவுடன் ஓய்வூதியம் பெறலாம்.
LIC ஸ்மார்ட் பென்சன் திட்டம்
பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை தவிர்த்து, பாதுகாப்பான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது இணைக்கப்படாத, பங்குபெறாத வகை திட்டம் என்பதால் சந்தை சார்ந்த அபாயம் இல்லை. அதனால் பலரும் இதை “ஜீரோ ரிஸ்க் பென்சன் திட்டம்” என அழைக்கிறார்கள். முக்கியமாக, பாலிசி வாங்கும் நேரத்திலேயே ஓய்வூதிய தொகை நிர்ணயிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் அதே கட்டமைப்பில் வழங்கப்படும்.
உடனடி வருடாந்திர திட்டம்
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக கொள்முதல் தொகை ரூ.1 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அதிகபட்ச முதலீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட உச்ச வரம்பு இல்லை என்பதால், தேவைக்கேற்ப பெரிய தொகையையும் முதலீடு செய்யலாம். இந்த பாலிசியை தனிநபராகவும் அல்லது கூட்டுக் கணக்காகவும் தொடங்க முடியும். மேலும், ஓய்வூதியத்தை மாதந்தோறும் / காலாண்டுக்கு ஒருமுறை / அரையாண்டுக்கு ஒருமுறை / வருடத்திற்கு ஒருமுறை பெறும் விருப்பமும் கிடைக்கிறது.
உறுதியான பென்சன் திட்டம்
கூடுதலாக, தேர்வு செய்யும் ஆப்ஷன்களுக்கு ஏற்ப, ஓய்வூதியம் 3% அல்லது 6% உயர்ந்து வரும் வகையில் அமைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. அதுபோல பாலிசிதாரர் இறந்த பிறகு முதலீடு செய்த பணத்தை குடும்பத்தார் பெறும் வகையிலும் சில விருப்பங்கள் வழங்கப்படும். ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் தேடும் ஓய்வுபெற்றவர்கள், தனியார் ஊழியர்கள், மூத்த குடிமக்கள் போன்றோருக்கு இது உதவியாக இருக்கும்.
ரூ.20 லட்சம் முதலீடு ஓய்வூதியம்
இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.10,880 பெறுவது எப்படி என்றால், ஒரு முதலீட்டாளர் ஒரே முறையாக ரூ.20 லட்சம் முதலீடு செய்தால் LIC கணக்கீட்டின்படி ஆண்டுக்கு ரூ.1,36,000 வருமானம் கிடைக்கும். அதனை மாதாந்திரமாகப் பிரித்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.10,880 பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் உண்மையான வருமானம் முதலீட்டாளர் வயது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய ஆப்ஷனைப் பொறுத்து மாறக்கூடும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

