- Home
- Astrology
- ராசியை மாற்றும் புதன்.! தொழிலில் லாபம், வாழ்வில் மாற்றம், கை நிறைய சம்பளத்துடன் புது வேலை.! ஜொலிக்கப்போகும் 5 ராசிகள்.!
ராசியை மாற்றும் புதன்.! தொழிலில் லாபம், வாழ்வில் மாற்றம், கை நிறைய சம்பளத்துடன் புது வேலை.! ஜொலிக்கப்போகும் 5 ராசிகள்.!
பிப்ரவரி 3 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கங்களை தர இருக்கிறது. இந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் புதன் கிரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. புதன் பகவான் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் படிப்பு, பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரகராக விளங்கி வருகிறார். பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கங்கள் மற்றும் சுப பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம்.
மேஷம்
கும்ப ராசியில் புதனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் வளர்ச்சி, புதிய தொடர்புகள் மற்றும் வேலை இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உங்களை தொந்தரவு செய்து வந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவார்கள். பணியிடத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் நிம்மதியடையும். நீண்ட காலமாக இருந்து வந்த பணிகள் இப்போது முன்னேறும். நண்பர்களின் உதவியுடன் சில பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மிதுனம்
புதன் உங்கள் ராசி அதிபதி என்பதால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பு வாய்ந்தாக இருக்கும். உங்கள் அறிவுத்திறன் கூடும். இது உங்களை புதிய யோசனைகளை நோக்கி அழைத்துச் செல்லும். கல்வி, எழுத்து, ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இது அற்புதமான நேரம். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் அல்லது கல்வி தொடர்பான பணிகள் இப்போது முடிவடையும் வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி உறவுகள் மற்றும் கூட்டுத் தொழிலில் மாற்றங்களைக் கொண்டுவரும். திருமண வாழ்வில் அன்னோன்யம் அதிகரிக்கும். பழைய மனக்கசப்புகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம், இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நன்மை பயக்கும். நீங்கள் ஏதேனும் ஒப்பந்தத்திற்காகக் காத்திருந்தால், அது இப்போது இறுதி செய்யப்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி படைப்பாற்றலையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். கலை, ஊடகம், கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பு லாபம் உண்டாகும். காதல் உறவுகளில் தெளிவு பிறக்கும். குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைக் கேட்க வாய்ப்பு உள்ளது. முதலீட்டு முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும், இருப்பினும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நன்மையிலேயே முடியும்.
கும்பம்
புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், இதன் தாக்கம் உங்கள் மீது அதிகமாக இருக்கும். உங்கள் சிந்தனை, பேச்சு, முடிவெடுக்கும் திறனில் முன்னேற்றம் காணப்படும். தொழில்ரீதியாக புதிய தொடக்கங்கள் ஏற்படும். வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் தவிப்பவர்கள் இப்போது சரியான திசையைக் கண்டுபிடிப்பார்கள். புதிய தொடக்கங்கள் அல்லது பதவி உயர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பேச்சாற்றல் மூலம் அனைவரையும் கவர்வீர்கள் மற்றும் காரியத்தை சாதிப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

