மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர்.

10:16 PM (IST) Oct 30
இந்த விதிகள் நவம்பர் 1 முதல் மாறும், பண்டிகை காலங்களில் மக்களின் பாக்கெட்டுகள் பாதிக்கப்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
09:37 PM (IST) Oct 30
வாட்ஸ்அப் சேனல்களில் உரை மட்டும் செய்திகளைத் திருத்தும் வசதியை வெளியிட்டுள்ளது.
07:32 PM (IST) Oct 30
தீபாவளி பண்டிகை என்றாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். இத்தகைய நவம்பர் மாதத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட உள்ளது. இதனைப் பற்றி முழுமையாக இங்கு பார்க்கலாம்.
07:02 PM (IST) Oct 30
டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான முறைகேடு தொடர்பான வழக்குகளில் மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
06:19 PM (IST) Oct 30
பவுன்ஸின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 8 வினாடிகளில் வேகத்தை அதிகரிக்கும். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
05:38 PM (IST) Oct 30
எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு மகாராஷ்டிர சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
05:23 PM (IST) Oct 30
05:21 PM (IST) Oct 30
கிரெடிட் கார்டு ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. ஏடிஎம்மில் இருந்து கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம். அது பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
05:07 PM (IST) Oct 30
ஹமாஸ் தாக்குதல் நடத்திய போது இஸ்ரேலில் இருந்த ஷானி லூக் என்ற ஜெர்மன் பெண்ணின் சடலம் இஸ்ரேலால் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடலை ஹமாஸ் தீவிரவாதிகள் நிர்வாணமாக அணிவகுத்து சென்றனர்.
05:03 PM (IST) Oct 30
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு தீவிர உடற்பயிற்சி ஓட்ட பயிற்சியை தவிர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்
04:21 PM (IST) Oct 30
தேர்தல் பரப்புரையில் தெலுங்கானாவை சேர்ந்த பிஆர்எஸ் எம்பி கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கத்திக்குத்து. அடையாளம் தெரியாத நபரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.
03:55 PM (IST) Oct 30
அமர்பிரசாத் ரெட்டி உள்பட 4 பேரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
02:37 PM (IST) Oct 30
பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனக்கு ஏற்பட்டுள்ள அரியவகை நோய் பாதிப்பு காரணமாக தான் திரையரங்குகளுக்காக சினிமா எடுப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
02:28 PM (IST) Oct 30
ஆந்திர மாநிலத்தில் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் செல்லவுள்ளார்
02:28 PM (IST) Oct 30
ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வந்துள்ளது.
01:53 PM (IST) Oct 30
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் முடிந்த கையோடு அதன் இரண்டாம் பாகம் இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
01:04 PM (IST) Oct 30
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
12:02 PM (IST) Oct 30
மதுரையில் இரண்டு புதிய மேம்பாலத்துக்கான கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
11:57 AM (IST) Oct 30
நடிகர் ரஜினிகாந்தை தான் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக காட்டுத்தீ போல் தகவல் பரவியது குறித்து நடிகை கவிதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
11:05 AM (IST) Oct 30
லியோ படத்தின் வெற்றி விழாவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
10:58 AM (IST) Oct 30
2ஜி மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது
10:57 AM (IST) Oct 30
தமிழக அமைச்சர்கள் 3 பேரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் தமிழக பாஜக சார்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
10:03 AM (IST) Oct 30
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்துள்ள 5 பேரையும் முதல்நாளே பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்றிய புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
09:38 AM (IST) Oct 30
நடிகை அமலா பால் தனது காதலன் ஜகத் தேசாய் உடன் நடத்திய ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
08:55 AM (IST) Oct 30
லியோ பட ரிலீஸுக்கு பின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், அப்படத்தில் கவனிக்கப்படாத டுவிஸ்ட் பற்றி பேசி இருக்கிறார்.
08:00 AM (IST) Oct 30
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு கன மழை பெய்த நிலையில், இன்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
08:00 AM (IST) Oct 30
யூடியூப் மூலமாக வெடிகுண்டு தயாரிக்க கற்றுக் கொண்டு கொச்சியில் மூலப் பொருட்களை வாங்கி ஐஇடி குண்டு தயாரித்ததாக போலீசாரிடம் டொமினிக் மார்ட்டின் தெரிவித்துள்ளார். காலை 7.30 மணிக்கு குண்டு வைத்து விட்டு 9.30 மணிக்கு ரிமோட் மூலம் இயக்கியதாகவும் கூறியுள்ளார்.
07:59 AM (IST) Oct 30
பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜைக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என தேவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் பங்கேற்க , இன்று பசும்பொன் செல்வதால் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.